சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசா வழங்கி மோசடி

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசா வழங்கி மோசடி

Published on

சென்னை: சென்​னை​யில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்​டில் 2.2 லட்​சம் ஹெச்​.1பி விசாக்​கள் வழங்​கப்​பட்​ட​தில் மோசடி நடந்​திருப்​ப​தாக அமெரிக்க எம்​பி​யும், பொருளா​தார நிபுணரு​மான டேவ் பிராட் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, பாட்​காஸ்ட் நிகழ்ச்சி ஒன்​றில் அவர் பேசி​ய​தாவது: ஓராண்​டில் மொத்​த​மாகவே 85 ஆயிரம் பேருக்கு தான் ஹெச்​.1பி விசா வழங்கவேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ளன.

ஆனால், இந்​தி​யா​வில் உள்ள சென்​னை​யில் இயங்​கும் அமெரிக்க தூதரகத்தில் மட்​டுமே கடந்த ஆண்​டில் 2.20 லட்​சம் விசாக்​கள் வழங்​கப்​பட்​டு உள்​ளது.

இது அனு​ம​திக்​கப்​பட்ட வரம்​பைக் காட்​டிலும் 2.5 மடங்கு அதி​க​மாகும். இந்​தி​யா​வில் ஹெச்​.1பி விசா வழங்​கு​வதன் பின்​னணி​யில் மிகப்​பெரிய மோசடியே நடக்​கிறது. இதை ஒரு தொழிலாகவே செய்​கின்​றனர்.

இதே​போல், சென்னை தூதரகத்​தில் 2.20 லட்​சம் ஹெச்​.1பி விசா வழங்​கப்​பட்​டது போலவே ஊழியர்​கள் தங்​களது துணையை உடன் அழைத்​துச் செல்ல 1.40 லட்​சம் ஹெச்.4 விசாக்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த மோசடிகள் எப்​படி சாத்​தி​ய​மானது என்​பது புரிய​வில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார்.

இதுதொடர்​பாக முன்​னாள் தூதரக அதி​காரி மஹ்​வாஷ் சித்​திக் கூறுகை​யில், “இந்​தி​யா​வில் இருந்து வரக்​கூடிய 80 சதவீதம் ஹெச்​.1பி விசா​வின் விண்​ணப்​பங்​கள் போலி​யானவை. சிலர் நேர்​காணலில் கூட கலந்​து​கொள்​ளாமல் மோசடி விசா பெறுகின்​றனர்.

இந்​தி​யா​வில் மோசடி​யும், லஞ்​ச​மும் சர்வ சாதா​ரண​மாகி​விட்​டது. ஹைத​ரா​பாத்​தில் இருந்து போலி​யாக ஹெச்​.1பி விசா பெற்​றுக் கொடுக்​கவே தனித்​தனி நெட்​வொர்​க் இயங்கி வரு​கின்​றன.” என்று தெரி​வித்​தார்​.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரே ஆண்டில் 2.2 லட்சம் ஹெச்.1பி விசா வழங்கி மோசடி
தூய்மைப்பணி தனியார்மயத்தை எதிர்த்து உண்ணாவிரதம்: 4 பேர் உடல்நிலை குறித்து அறிக்கை தினமும் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in