தசரா விடுமுறையில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகள் அக்.23-ல் விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு

தசரா விடுமுறையில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகள் அக்.23-ல் விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் 17-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை தாக்கல் செய்வது மற்றும் விசாரிப்பது குறித்து தலைமை பதிவாளர் தீப்தி அறிவுநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அவசர வழக்குகளை அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யலாம் என்றும், அந்த வழக்குகள் அக்டோபர் 23-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜீ.கே.முத்துக்குமார், வி.லட்சுமி நாராயணன், என்.செந்தில்குமார், என்.ரமேஷ் ஆகியோர் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மதுரை அமர்வில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன், என்.திலீப்குமார் ஆகியோர் விசாரிப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தசரா விடுமுறையில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகள் அக்.23-ல் விசாரணை: ஐகோர்ட் அறிவிப்பு
16 வயது சிறுமிக்கு பாலியல்​ வன்கொடுமை: தலைமறைவான வளர்ப்பு தந்தைக்கு வாழ்நாள்​ சிறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in