ஸ்ரீராமச்சந்திராவின் 42-வது பட்டமளிப்பு விழா: இளைஞர்களின் ஆரோக்கியமே வளர்ந்த இந்தியாவின் இலக்கு - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவுரை

போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள், தங்கப் பதக்கங்களை வழங்கினார். ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன் ஆகியோர் உடன் உள்ளனர்.

போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள், தங்கப் பதக்கங்களை வழங்கினார். ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Updated on: 
1 min read

சென்னை: சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் 42-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்​தது.

இந்த விழா​வில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற மத்​திய அறி​வியல், தொழில்​நுட்​பம் மற்​றும் புவி அறி​வியல் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், தேர்​வில் சிறப்​பாக தேர்ச்சி பெற்ற மாணவர்​களுக்கு 106 தங்​கப்​ப​தக்​கங்​களை வழங்​கினார்.

தொடர்ந்து, ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர். வெங்​கடாசலம், இணைவேந்​தர் ஆர்.வி. செங்​குட்​டுவன் ஆகியோர் மருத்​து​வம், பொறி​யியல் மற்​றும் மேலாண்மை துறைகளில் 2116 மாணவர்​களுக்கு முனைவர், முது​நிலை மற்​றும் இளநிலை பட்​டங்​களை வழங்​கினர்.

விழா​வில் மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் பேசிய​தாவது: 21-ம் நூற்​றாண்​டின் புதிய தொழில்​நுட்​பங்​களான செயற்கை நுண்​ணறிவு, மரபணுவியல், குவாண்​டம் தொழில்​நுட்​பம் ஆகியவை மருத்​து​வத்​துறை​யில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்து​கின்​றன.

தொழில்​நுட்​பம் வளர்ந்​துள்​ள​தால், மருத்​து​வத்​தின் தன்மை குறைந்து விடா​மல் செயற்கை நுண்​ணறிவை கையாளுவதே இன்​றைய இளம் மருத்​து​வர்​களின் சவாலாகும்.

முந்​தைய காலங்​களில் காசநோய், மலேரியா போன்ற பரவும் நோய்​கள் மட்​டுமே சவாலாக இருந்​தது. ஆனால், தற்​போது நீரி​ழிவு மற்​றும் மாரடைப்பு போன்ற தொற்றா நோய்​கள் இளைய தலைமுறை​யினரை அதி​கம் தாக்​கு​வது பெரும் சவாலாக உள்​ளது.

பிரதமரின் வளர்ந்த இந்​தியா 2047 என்ற இலக்கை அடைய இளைஞர்​களின் ஆற்​றல் மிகவும் அவ​சி​யம். தடுக்​கக்​கூடிய நோய்களால், அவர்​களின் ஆற்​றல் வீணா வதை தடுக்க அரசு மற்றும் தனியார் துறைகள் ஒன்​றிணைந்து செயல்​பட வேண்​டும். இளைஞர்​களின் ஆரோக்​கியமே வளர்ந்த இந்​தி​யாவின் இலக்கு ஆகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்த விழா​வில் ஸ்ரீராமச்​சந்​திரா கல்வி மற்​றும் மருத்​துவ அறக்​கட்​டளை​யின் அறங்​காவலர் சம்​யுக்தா வெங்​கடாசலம், மருத்​துவ கல்​லூரி தலை​வர் மருத்​து​வர் கே.பாலாஜி சிங், பதிவாளர் மருத்​து​வர் எஸ்.செந்​தில்​குமார், ஆய்​வுத்​துறை தலை​வர் மருத்​து​வர் பி.வெங்​கடாசலம், தேர்​வு​கள் கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் ஆர்.பத்​மாவதி, நிதித்​துறை இயக்​குநர் ஜே.ரவிசங்​கர் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டங்கள், தங்கப் பதக்கங்களை வழங்கினார். ஸ்ரீராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், இணைவேந்தர் ஆர்.வி.செங்குட்டுவன் ஆகியோர் உடன் உள்ளனர்.</p></div>
சென்னையில் பால் தடையின்றி விநியோகம்: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in