நெய்வேலியில் விமான சேவை தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பதில்

நெய்வேலியில் விமான சேவை தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பதில்
Updated on
1 min read

கடலூர்: கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் இன்று மக்களைவில் நெய்வேலி விமான நிலையத்தின் செயல்பாட்டு நிலை, விமான சேவை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் விமான நிலையத்தின் எதிர்கால விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், ‘நெய்வேலி விமான நிலையம் RCS-UDAN திட்டத்தின் கீழ் ரூ.27.11 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. UDAN 4.2 திட்டத்தின் கீழ் நெய்வேலி - சென்னை - நெய்வேலி விமான வழித்தடம், 9 இருக்கைகள் கொண்ட விமானம் மூலம் சேவை வழங்க ஏர் டாக்ஸி நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெய்வேலி விமான நிலையத்திற்கான ஏரோ டிராம் லைசென்ஸ் பெற என்எல்சி இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் சார்ந்த ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும், இந்திய வானிலை மையம் சார்பில் தேவையான வானிலை ஆய்வு உபகரணங்களும் நிறுவப்பட வேண்டும். விமான நிலையம் முழுமையாக தயாரான பின்னரே UDAN விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் ஒடுதளம், ஏப்ரன், பயணிகள் முனையம் மற்றும் இதர உள் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது, தொழில்நுட்ப சாத்தியம், விமானப் போக்குவரத்து தேவை, நிலம் கிடைக்கும் நிலை, சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் செயல்பாட்டு தேவைகளின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலியில் விமான சேவை தொடங்குவது எப்போது? - மத்திய அரசு பதில்
பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்துக: அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in