

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னை அண்ணாநகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்கில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு, தனியார் மருத்துவமனைகளில் மின்சாரம் தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மழைநீர், கழிவுநீர் கட்டமைப்பு முறையாக நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் தோல்வியில் இருந்து வெளியே வரவில்லை. அதனால் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த ஆட்சியில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. அரசியல் தலையீடுஇருந்ததுடன், போதை பொருள் பயன்பாடும் இருந்தது. இதனால் குற்றங்கள் நடந்து வருகின்றன. தற்போது காவல்துறை சுதந்திரமாக செயல்படுவதுடன், போதை பொருள் பயன்பாட்டையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.