“அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை” - புதுவை அமைச்சர் சிவக்கொழுந்து அறிவிப்பு

புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்து

புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்து

Updated on
1 min read

புதுச்சேரி: “அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடை தரப்படும். அம்மையங்களில் முதல் கட்டமாக 9 இடங்களில் குழந்தை பராமரிப்பு மையங்கள் நடப்பாண்டு தொடங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அமைச்சர் சிவக்கொழுந்து பதிலளித்து பேசுகையில் “அங்கன்வாடி மையத்துக்கு வண்ணமிடும் புத்தகங்கள், வண்ண பென்சில்கள், நினைவாற்றலை அதிகரிக்கும் ஃப்ளாஷ் அட்டைகள், சுவரொட்டிகள் அடங்கிய கல்வி சார் சாதனங்கள் தரப்படும். அங்கன்வாடி குழந்தைகள் 12 ஆயிரம் குழந்தைகளுக்கு ரூ.60 லட்சத்தில் இரண்டு ஜோடி சீருடைகள் தரப்படும்.

அங்கன்வாடி ஊட்டச்சத்து திட்டம் திருத்தப்பட்டு, காலை சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு பல்வேறு பயறுகள் தரப்படும், தினமும் முட்டை தரப்படும். 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்துக்கு இரு முறை பருவகால பழங்கள், வாரத்துக்கு ஒரு முறை சிறுதானியங்கள் கலந்த சத்துமிக்க பிஸ்கெட் தரப்படும். விடுமுறை நாட்களான 65 நாட்களுக்கு சத்துமாவு தரப்படும்.

உட்கட்டமைப்பு வசதி உள்ள அங்கன்வாடிகளில் குழந்தை பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும். முதல் கட்டமாக 9 இடங்களில் நடப்பாண்டு தொடங்கப்படும். இட வசதிக்கு ஏற்ப உலோக ஊஞ்சல்கள், உள்ளரங்க சறுக்குகள், சவாரி செய்யும் பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள் அறை உள்ளிட்டவை அமைக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி அமைச்சர் சிவக்கொழுந்து</p></div>
கொளத்தூரில் வி.எஸ்.பாபு வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in