மகனின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உதயநிதி லண்டன் பயணம்

மகனின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உதயநிதி லண்டன் பயணம்
Updated on
1 min read

சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை விமானத்தில், சென்னையில் இருந்து, துபாய் வழியாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஒருவார கால பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு, லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரது மகன் இன்பநிதி, லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர் படிப்பு படித்து வந்தார். அதற்கான பட்டமளிப்பு விழா நாளைநடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதில் மனைவியுடன் உதயநிதி கலந்து கொள்கிறார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த பின்னர், குடும்பத்தினர் அனைவரும் 18-ம் தேதி லண்டனிலிருந்து சென்னை திரும்புகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.திமுக தலைவர் ஸ்டாலின், பேரன்இன்பநிதியின் பட்டம் பெறும் விழாவில் பங்கேற்பற்காக கடந்த 4-ம் தேதியே மனைவியுடன் லண்டன் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மகனின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உதயநிதி லண்டன் பயணம்
“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்” - எஸ்.ஜானகிக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in