“விமர்சனத்துக்காக கைது செய்யும் அரசு மக்கள் மன்றத்தில் சரிவை சந்திக்கும்” - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: “விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவை சந்திப்பது உறுதி” என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சர்வாதிகார சோஃபா மாடல் அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.

சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கட்சி மற்றும் மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள மார்க்கண்டேயனிடம் நலம் விசாரித்தோம். அவரின் விடுதலைக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.

மிசா - எமர்ஜன்சியை பார்த்தது திமுக. தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் சோஃபா அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.

விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவை சந்திப்பது உறுதி” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின் </p></div>
“விஜய் ஆட்சியில் உண்மையிலேயே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டனவா?” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in