“மக்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும்” - பிறந்த நாள் விழாவில் உதயநிதி அறிவுரை

“மக்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும்” - பிறந்த நாள் விழாவில் உதயநிதி அறிவுரை
Updated on
1 min read

வரும் 4 மாதங்​களில் திமுக​வினர் கவன​மாக செயல்​பட்டு மக்​களின் வாக்​கு​களை காப்​பாற்ற வேண்​டும் என்று தனது பிறந்த நாளை முன்​னிட்டு நடந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார்.

உதயநிதி ஸ்டா​லின் நேற்று தனது 49-வது பிறந்த நாளை கொண்​டாடி​னார். இதை முன்​னிட்​டு, பெரி​யார் திடலில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​றார்.

அதில் துணை முதல்​வர் உதயநிதி பேசி​ய​தாவது: எனது பிறந்​த​நாளை ஒட்டி பல்​வேறு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது எஸ்​ஐஆர் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன. இதன்​மூலம் பொது​மக்​கள் தங்​களின் வாக்​கு​களை உறுதி செய்​து​கொள்ள வேண்​டும். தேர்​தலுக்கு இன்​னும் 4 மாதங்​களே உள்​ளன.

அடுத்து வரும் 4 மாத காலம் மிக​வும் முக்​கிய​மானது. கட்​சி​யினர் நமது இலக்கை அடைய கவன​மாக செயல்பட வேண்​டும். முதல்​வர் கூறியது போல நமது இலக்கு ‘வெல்​வோம் 200, படைப்​போம் வரலாறு’. அதுவே எனது பிறந்​த​நாள் வேண்​டு​கோளாகும் என்​றார்.

தொடர்ந்து உதயநிதி ஸ்டா​லின் நிருபர்​களிடம் கூறும்​போது, “தொண்​டர்​களின் பிறந்​த​நாள் வாழ்த்​துகளை நான் ஏற்​றுக் கொண்​டுள்​ளேன். மேலும் எஸ்​ஐஆர் பணி​களில் இளைஞர் அணி​யினர் தீவிரம் காட்ட வேண்​டும். கூடு​தல் கவனம் செலுத்தி மக்​களின் வாக்​கு​களை காப்​பாற்ற வேண்​டும். எனது பிறந்​த​நாளை மனிதநேய நாள் என்று நான் சொல்​ல​வில்​லை.

பிறந்த நாள் விழா எந்த ஆடம்​பர​மும் இல்​லாமல் மக்​கள் நலப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. ஆண்டு முழு​வதும் மக்​கள் பணியை செய்ய வேண்​டும். பரு​வ​மழைக்​கான முன்​னெச்​சரிக்கை பணி​களுக்கு நாங்​கள் தயா​ராக உள்​ளோம்​”என்​று தெரி​வித்​தார்.

“மக்களின் வாக்குகளை காப்பாற்ற வேண்டும்” - பிறந்த நாள் விழாவில் உதயநிதி அறிவுரை
வெள்ளம், நிலச்சரிவால் இலங்கையில் 47 பேர் உயிரிழப்பு: புரட்டிப் போட்ட கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in