கனமழையால் 20 ஆயிரம் ஹெக்டர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன: துணை முதல்வர் உதயநிதி தகவல்

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

சென்னை: கனமழையால் தமிழகத்​தில் 20 ஆயிரம் ஹெக்​டர் பயிர்​கள் நீரில் முழ்​கி​யுள்​ளன. வெள்​ளம் வடிந்​ததும் கணக்​கெடுப்பு நடத்தப்படும் என துணை முதல்​வர் உதயநிதி தெரி​வித்​துள்​ளார்.

சென்னை எழிலகத்தில் செயல்​பட்டு வரும் மாநில அவசர​கால செயல்​பாட்டு மையம், மாநக​ராட்​சி​யில் இயங்கி வரும் கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு மையம் ஆகிய​வற்​றில் டிட்வா புயலை எதிர்கொள்​வதற்​காக மேற்​கொள்​ளப்​பட்டு வரும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்​வர் உதயநிதி நேற்று முன்​தினம் நள்​ளிரவு ஆய்வு மேற்​கொண்​டார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: புயல் தமிழகத்​தின் கடலோர மாவட்​டங்​கள் வழி​யாக நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது​வரை அதி​கபட்​ச​மாக நாகப்​பட்​டினத்​தில் 30 செ.மீ அளவுக்கு மழை பதி​வாகி​யுள்​ளது. தமிழகத்​தின் நீர்த்​தேக்​கங்​களில் தற்​போது 85 சதவீதம் நீர்இருப்பு உள்​ளது.

இதனால் பயப்​படும்​படி​யான சூழல் ஏது​வுமில்​லை. கனமழை காரண​மாக நிவாரண பணி நடவடிக்​கைகளை மேற்​கொள்ள 16 மாநில பேரிடர் மீட்பு படை, 12 தேசிய பேரிடர் மீட்பு படை கடலோர மாவட்​டங்​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன. பேரிடர் சூழலை திறம்பட கையாள்​வதற்கு கூடு​தலாக 10 தேசிய பேரிடர் மீட்பு படைக்​கும் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

மீட்பு பணி​களுக்​காக 1,185 படகு​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன. அதிக மழை எதிர் ​கொண்ட மாவட்​டங்​களில் 26 நிவாரண முகாம்​கள் அமைக்​கப்​பட்​டு, அதில் மொத்​தம் 1,836 பேர் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

அவர்​களுக்கு தேவை​யான குடிநீர், உணவு உள்​ளிட்ட வசதிகள் செய்து கொடுக்​கப்​பட்​டுள்​ளன. அவர்​களுக்​காக 5 லட்​சம் 5 கிலோ அரிசி பாக்​கெட்​டு​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளன.

உயி​ரிழப்​பு​களை தவிர்க்க அரசு முழு​வீச்​சில் செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது. தற்​போது வரை பெய்த கனமழை​யால் 20 ஆயிரம் ஹெக்​டேர் பயிர்​கள் நீரில் மூழ்​கி​யிருக்​கின்​றன. வெள்​ளம் வடிந்​ததும் இதுதொடர்​பான கணக்​கெடுப்பு நடத்​தப்​படும்.

அரசு எடுக்​கும் நடவடிக்கைகளுக்​கும் மக்​கள் முழு ஒத்​துழைப்பு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த ஆய்​வில் அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன், துறை செயலர் எம்​.​சாய்​கு​மார், சிறப்​புத்​ திட்ட செய​லாக்​கத் துறை செயலர் பிரதீப் யாதவ், மேலாண்மை துறை ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன், மாநக​ராட்சி ஆணை​யர்​ ஜெ.குமரகுருபரன்​ உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

<div class="paragraphs"><p>சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் புகார் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். உடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர்.</p></div>
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகம் துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in