வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பள்ளிக்கட்டிடம், பேருந்து நிலையம்: உதயநிதி திறந்துவைத்தார்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ்  புழல் மகாலட்சுமி நகரில் ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் புழல் மகாலட்சுமி நகரில் ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated on
2 min read

சென்னை: வடசென்னை வளர்ச்சிக் திட்​டத்​தின் கீழ் சிஎம்​டிஏ சார்​பில், ரூ.53 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்​டுள்ள சென்னை நடுநிலைப் பள்​ளிக்கட்​டிடம், பேருந்து நிலை​யம், விளை​யாட்டு வளாகம் ஆகிய​வற்றை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் திறந்​து​வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மாதவரம் தொகு​திக்கு உட்​பட்ட புழல் மகாலஷ்மி நகரில் அமைந்​துள்ள மாதவரம் ஊராட்சி ஒன்​றிய பள்​ளி, கடந்த 1967-ம் ஆண்டு அண்ணா முதல்​வ​ராக இருந்​த​போது திறக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், வடசென்னை வளர்ச்​சித் திட்​டத்​தின் கீழ், சிஎம்​டிஏ சார்​பில், ரூ.12.39 கோடி செல​வில் 37,342 சதுரஅடி கட்​டிடப் பரப்​பள​வில் தரை தளம் மற்​றும் மூன்று தளங்​களு​டன் சென்னை நடுநிலைப் பள்ளி கட்​டிடம் கட்​டப்​பட்​டுள்​ளது.

இதில், 27 வகுப்​பறை​கள், தலைமை ஆசிரியர் அறை, ஆசிரியர்​கள் அறை, பதிவு அறை, 2 ஆய்​வகங்​கள், உடற்​கல்வி கூடம், நூல​கம், சுத்​தி​கரிக்​கப்​பட்ட குடிநீர் வசதி, சேமிப்பு அறை, ஆண்​கள், பெண்​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்​கான கழிப்​பறை​கள் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் கட்​டப்​பட்​டுள்​ளது.

ஆர்​.கே.நகர் தொகு​தி​யில், சிஎம்​டிஏ சார்​பில் ரூ.21.95 கோடி​யில் தரைதளம் மற்​றும் 2 தளங்​களு​டன் தண்​டை​யார்ப்​பேட்டை பேருந்து நிலை​யம், 37,157 சதுர அடி கட்​டிடப் பரப்​பள​வில் தரைதளம் மற்​றும் முதல் தளத்​துடன் ஆர்​.கே.நகர் விளை​யாட்டு வளாக​ம் கட்​டப்​பட்​டுள்​ளது.

இவற்றை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​தார். அதே​போல், ராயபுரம் மண்​டலம், வார்​டு-52, கல்​லறை சாலை​யில் ரூ.10.32 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள கலைஞர் திருமண மாளி​கை, திரு.​வி.க.நகர் மண்​டலம், வார்​டு-73, புளியந்​தோப்​பு, திரு​வேங்​கட​சாமி தெரு சென்னை தொடக்​கப் பள்​ளி​யில் ரூ.5.01 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடத்​தை​யும் திறந்​தார்.

மேலும், தண்​டை​யார்​பேட்டை மாநகர் போக்​கு​வரத்​துக் கழக பணிமனை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் ரூ.33.82 கோடி மதிப்​பில், மேம்​படுத்​தப்​பட்ட தண்​டை​யார்​பேட்​டை-1 மின்​சா​ரப் பேருந்து பணிமனையைத் திறந்​து​வைத்​து, ரூ.170 கோடி மதிப்​பிலான 100 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகளின் இயக்​கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்​தார்.

அதைத்​தொடர்ந்து இரண்​டாம் கட்​ட​மாக 750 புதிய தாழ்தள மின்​சா​ரப் பேருந்​துகள் இயக்​கப்​படு​வதற்​காக ரூ.289 கோடி மதிப்​பீட்​டில் மின்​னேற்ற வசதி​களு​டன் மின்​சா​ரப் பணிமனை​களாக மேம்​படுத்​துதல் மற்​றும் புதிய பணிமனை​கள் அமைக்​கும்பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் சா.சி.சிவசங்​கர், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, கலாநிதி வீரா​சாமி எம்​.பி., மாதவரம் எஸ்​.சுதர்சனம் உள்​ளிட்​ட எம்​எல்​ஏ.க்​கள்​, அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

<div class="paragraphs"><p>வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ்  புழல் மகாலட்சுமி நகரில் ரூ.12.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை நடுநிலைப் பள்ளி கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p></div>
ஈரான் ஆதரவு போராட்டங்களை முடக்க முயற்சி: மத்திய அரசு மீது இந்திய கம்யூ. குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in