காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை பண்டிகை: சென்னை - கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை பண்டிகை: சென்னை - கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: ​காந்தி ஜெயந்​தி, ஆயுத​பூஜை பண்​டிகையை முன்​னிட்​டு, சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, சென்​னை​யில் இருந்து கொல்​லத்​துக்கு 2 சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

வரும் அக்​டோபர் மாதம் அடுத்​தடுத்து பல விடு​முறை நாட்​கள் வரு​கின்​றன. காந்தி ஜெயந்தி அக்​.2-ம் தேதி​யும், ஆயுத​பூஜை அக்​.19-ம் தேதி​யும், விஜயதசமி அக்​.20-ம்- தேதி​யும் அடுத்​தடுத்து வரு​கிறது. இதையொட்​டி, சென்​னை​யில் இருந்து சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, சிறப்பு ரயில்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன.

அதன் விவரம்:

சென்னை எழும்​பூரில் இருந்து அக்​.1, 8, 15, 22, 29 ஆகிய தேதி​களில் இரவு 11.40 மணிக்கு வாராந்​திர சிறப்பு ரயில் (06117) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 4.20 மணிக்கு கொல்​லத்தை சென்​றடை​யும்.

மறு​மார்க்​க​மாக, கொல்​லத்​தில் இருந்து அக்​.2, 9, 16, 23, 30 ஆகிய தேதி​களில் மாலை 6.45 மணிக்கு வாராந்​திர சிறப்பு ரயில் (06118) புறப்​பட்​டு, மறு​நாள் நண்​பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்​பூரை வந்​தடை​யும்.

இந்த ரயில் பெரம்​பூர், திரு​வள்​ளூர், அரக்​கோணம், காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர், போத்​தனூர் வழி​யாக கொல்​லத்தை அடை​யும். சென்னை எழும்​பூரில் இருந்து அக்​.3, 10, 17, 24, 31 ஆகிய தேதி​களில் இரவு 11.40 மணிக்கு வாராந்​திர சிறப்பு ரயில் (06121) புறப்​பட்​டு, மறு​நாள் மாலை 4.20 மணிக்கு கொல்​லத்தை சென்​றடை​யும்.

மறு​மார்க்​க​மாக, கொல்​லத்​தில் இருந்து அக்​.4, 11, 18, 25, நவ.1 ஆகிய தேதி​களில் மாலை 6.45 மணிக்கு வாராந்​திர சிறப்பு ரயில் (06122) புறப்​பட்​டு, மறு​நாள் காலை 11.35 மணிக்கு சென்னை சென்ட்​ரலை வந்​தடை​யும். இந்த சிறப்பு ரயில்​களுக்​கான டிக்​கெட் முன்​ப​திவு இன்று (செப்​.23) காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது.

காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை பண்டிகை: சென்னை - கொல்லத்துக்கு 2 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
சிஆர்பிஎப் படை​யில் பெண்கள் நியமிக்கப்பட்டு 40 வருடம் நிறைவு: முக்​கிய வீராங்​க​னை​களை கவுரவிக்க திட்​டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in