

கடலூர்: சிறப்பு தீவிரத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி கடலூர் மாவட்டத்தில் 19,46,759 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 2,46,818 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளில் சிறப்பு தீவிரத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று வெளியிட்டார்.
அதன்படி ஆண்கள் 9,60,645, பெண்கள் 9,85,832, இதரர் 282 என மொத்தம் 19,46,759 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முகவரியில் இல்லாதவர்கள் 38,081, நிரந்தரமாக குடியிருப்பு மாறியவர்கள் 1,08,531, இறந்தவர்கள் 88,972, இரட்டைப் பதிவு உள்ளவர்கள் 10,844, இதர வாக்காளர்கள் 390 என மொத்தம் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக திட்டக்குடி (தனி) தொகுதியில் ஆண்கள் - 99,050, பெண்கள் - 1,01,488, இதரர் 3 என மொத்தம் 2,00,541. விருத்தாசலம் தொகுதியில் ஆண்கள் - 1,14,037, பெண்கள் - 1,14,480, இதரர் 20 என மொத்தம் 2,28,537. நெய்வேலி தொகுதியில் ஆண்கள் - 90,379, பெண்கள் - 1,89,560, இதரர் 16 என மொத்தம் 1,79,955.
பண்ருட்டி தொகுதியில் ஆண்கள் - 1,13,436, பெண்கள் - 1,19,747, இதரர் 64 என மொத்தம் 2,33,247. கடலூர் தொகுதியில் ஆண்கள் - 1,01,807, பெண்கள் - 1,11,509, இதரர் 76 என மொத்தம் 2,13,392. குறிஞ்சிப்பாடி தொகுதியில் ஆண்கள் - 1,12,821, பெண்கள் - 1,15,997, இதரர் 42 என மொத்தம் 2,28,860. புவனகிரி தொகுதியில் ஆண்கள் - 1,11,549, பெண்கள் - 1,11,962, இதரர் 19 என மொத்தம் 2,23,530.
சிதம்பரம் தொகுதியில் ஆண்கள் - 1,08,502, பெண்கள் - 1,11,573, இதரர் 31 என மொத்தம் 2,20,106. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஆண்கள் - 1,09,064, பெண்கள் - 1,09,516, இதரர் 11 என மொத்தம் 2,18,591 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
நீக்கப்பட்டவர்கள்: திட்டக்குடி - 21,975, விருத்தாசலம் - 31,824, நெய்வேலி - 26,446, பண்ருட்டி - 22,741, கடலூர் - 33,534, குறிஞ்சிப்பாடி - 24,941, புவனகிரி - 35,015, சிதம்பரம் - 31,433, காட்டுமன்னார்கோவில் - 18,909 என மொத்தம் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் ஆட்சேபனை மற்றும் உரிமைகோரல் காலத்தில் (19.12.2025 முதல் 18.01.2026 வரை) உரிய ஆவணங்களை சமர்ப்பித்து 17.02.2026 அன்று வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.