நீலாங்கரையில் தள்ளுமுள்ளுக்கு இடையே வாக்கு செலுத்திய விஜய்

இதர வாக்காளர்கள் வாக்கு செலுத்த 45 நிமிடம் காலதாமதம்
நீலாங்கரையில் தள்ளுமுள்ளுக்கு இடையே வாக்கு செலுத்திய விஜய்
Updated on
1 min read

சென்னை: நீலாங்கரை வாக்குச்சாவடியில் தள்ளு முள்ளுகளுக்கு இடையே தவெக தலைவர் விஜய் வாக்கு செலுத்தினார். இதனால் இதர வாக்காளர்கள் வாக்கு செலுத்த 45 நிமிடம் காலதாமதம் ஆனது.

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். அரசியல் பிரபலங்கள் மற்றும் திரைப்பிரபலங்களும் காலையிலேயே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

அந்த வகையில், தவெக தலைவர் விஜய், நீலாங்கரை ஶ்ரீ கபாலீஸ்வரர் நகரில் உள்ள சென்னை நடுநிலை பள்ளிக்கு வருகை வாக்கு செலுத்த காலை 8.30 மணி அளவில் வருகை தந்தார்.

அப்போது வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் இருந்தே கூட்ட நெரிசல், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதற்கு இடையே, போலீசாரின் உதவியுடன் பூத்துக்கு சென்று, தனது வாக்கை விஜய் செலுத்தினார். விஜய்யின் வருகையால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், வாக்குச்சாவடியில் போடப்பட்டிருந்த பந்தலில் இரண்டு, மூன்று கம்புகள் சரிந்து விழுந்தன. இதனால் பந்தலின் கீழ் நின்ற மற்ற வாக்காளர்கள் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் முழு பந்தலும் கூட விழுந்து விடுமோ என்ற அச்சம் அங்கிருந்தவர்களுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே விஜய் வாக்கு செலுத்தும் 282-வது பூத்திலும், 283-வது பூத்திலும் விஜய்க்காக 45 நிமிடங்கள் இதர வாக்காளர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாக்கு செலுத்திய பின்னர், வெளியே வரும் போது, அங்கே கூடியிருந்த வாக்காளர்களை பார்த்து வாக்கு செலுத்தியதற்கான அடையாளமாக தான் விரலை உயர்த்தி காட்டியபடியே விஜய் வெளியே வந்தார். அப்போது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவரின் தொப்பி கீழே விழுந்த நிலையில் விஜய் அதை எடுத்து கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றார்.

விஜய் வாக்கு செலுத்திய வாக்குச்சாவடியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த தள்ளுமுள்ளுவால் நீலாங்கரை பரபரப்பாக காணப்பட்டது

நீலாங்கரையில் தள்ளுமுள்ளுக்கு இடையே வாக்கு செலுத்திய விஜய்
மேற்கு வங்கத்தில் திரிணமூல், பாஜகவுக்கு சவாலாகும் முதல் கட்ட வாக்குப் பதிவு - காரணம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in