தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன்

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன்

Updated on
1 min read

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன:

  • புஸ்ஸி என்.ஆனந்த்

  • ஆதவ் அர்ஜுனா

  • கே.ஜி.அருண்ராஜ்

  • கே.ஏ.செங்கோட்டையன்

  • வெங்கடரமணன்

  • நிர்மல்குமார்

  • ராஜ்மோகன்

  • டி.கே.பிரபு

  • கீர்த்தனா

120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று மாலை வழங்கினார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

தமிழகத்தின் 18-வது முதல்வராக விஜய் பதவியேற்கிறார். அவருடன் இந்த 9 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். காங்கிரஸ் தரப்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

<div class="paragraphs"><p>புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன்</p></div>
முதல்வராக விஜய் இன்று பதவியேற்கிறார்: 13-ம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in