

கோப்புப் படம்
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக 10-ம் தேதி (நாளை) வேட்பாளர்களுக்கான நேர்காணலை தவெக தலைவர் விஜய், நடத்துகிறார். பனையூர், தவெக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த நேர்காணலில் வேட்பாளர்களை நேரடியாக விஜய் சந்தித்து கலந்துரையாடி தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது.