தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்பு

தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் விரிவான அறிக்கை கேட்டு தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், அந்த மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கடந்த 11-ம் தேதி வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி விஜயா ரஹாத்கர், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வித அரசியல் தலையீடும் இன்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆணையம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்பு
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 15 வயதில் கேப்டனாகி சூர்யவன்ஷி சாதனை

X