தவெக எம்எல்ஏ.க்களிடம் பேரம் பேசிய விவகாரம்: போலீஸ் விசாரணைக்கு மோகனூர் டாக்டர் அழைப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

நாமக்கல்: தவெக கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதாக நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டப்பேரவையில், பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதை ஆதரிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், திருச்சி நரேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

இந்நிலையில் இருவரும் முன்ஜாமீன் பெற்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிங்கப்பூரைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரை விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
இடைத்தேர்தல் ‘சவால்’ முதல் ‘வேட்டைக்காரன்’ பாடல் வரை: முதல்வர் விஜய்யின் கரூர் உரை ஹைலைட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in