‘ஜனநாயகன்’ டிக்கெட் பிரச்சினை: மேட்டூர் அருகே வேட்பாளரை நுழைய விடாமல் தடுத்த தவெகவினர்

‘ஜனநாயகன்’ டிக்கெட் பிரச்சினை: மேட்டூர் அருகே வேட்பாளரை நுழைய விடாமல் தடுத்த தவெகவினர்
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் தொகுதி தவெக வேட்பாளர், ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை ஊருக்குள் நுழைய விடாமல் அக்கட்சியினரே தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக செல்வம் போட்டியிடுகிறார். இவர் ஒவ்வொரு பகுதியாக சென்று நிராவாகிகளை சந்தித்துப் பேசி வுருகிறார். இந்நிலையில் வேட்பாளர் செல்வம் நேற்றிரவு நிர்வாகிகளை சந்திக்க கொளத்தூர் பகுதிக்கு வந்தார்.

அப்போது, கொளத்தூர் 4 ரோடு பகுதியில் இருந்த தவெக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது காரை மறித்ததோடு, ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, வேட்பாளருடன் வந்திருந்த நிர்வாகிகள் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாமல் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

அப்போது, ‘ஜனநாயகன்’ படத்திற்கு முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்களை வாங்கி கொண்டு, கொளத்தூர் பகுதி நிர்வாகிகளுக்கு அதிக விலைக்கு விற்றதாகவும், நிர்வாகிகளிடம் வேட்பாளர் செல்வம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தவெக வேட்பாளர் செல்வம் பதில் அளிக்காமல் காரில் அமர்ந்து கொண்டு இருந்ததால் நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்தனர்.

பின்னர், வேட்பாளர் செல்வம் மற்றும் அவரது நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். தமிழக வெற்றி கழகம் தற்போது முதன் முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறது. இதனிடையே, மேட்டூர் சட்டப்பேரவை தொகுதியில் வேட்பாளர் செல்வத்திற்கு கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘ஜனநாயகன்’ டிக்கெட் பிரச்சினை: மேட்டூர் அருகே வேட்பாளரை நுழைய விடாமல் தடுத்த தவெகவினர்
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in