நீட் தேர்வு எதிர்ப்பில் தவெக உறுதி: அமைச்சர் நிர்மல்குமார் கருத்து

நிர்மல்குமார் | கோப்புப் படம்

நிர்மல்குமார் | கோப்புப் படம்

Updated on
1 min read

திருச்சி: நீட் தேர்வை எதிர்ப்​ப​தில் தவெக உறு​தி​யாக இருக்​கிறது என தமிழக சட்​டம் மற்​றும் மின்​சா​ரத் துறை அமைச்​சர் சிடிஆர்​.நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார்.

திருச்​சி​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: நீட் தேர்வு தொடர்​பான மாணவர் போராட்​டங்​களில் திமுக தேவையற்ற அரசி​யல் செய்​கிறது. சிலரை ரூ.100, ரூ.200 பணம் கொடுத்து திமுக டி-ஷர்ட் அணி​வித்து போராட்​டத்​தில் அமர வைத்​துள்​ளது. உதயநிதி ஸ்டா​லின் இளைஞர்​களை தவறாக வழிநடத்​துகிறார்.

“ஜென் ஸி” என்ற வார்த்​தையை சரி​யாக புரிந்​து​கொள்​ளாமல் உதயநிதி பேச்சு உள்​ளது. மாணவர்​களின் உணர்​வுப்​பூர்​வ​மான போராட்​டங்​களை அரசி​யல் ஆதா​யத்​துக்​குப் பயன்​படுத்​தக் கூடாது. நீட் தேர்வை எதிர்ப்​ப​தில் தவெக உறு​தி​யாக இருக்​கிறது.

மாணவர் போராட்​டங்​களில் தவெக​வினர் பங்​கேற்​றாலும் கட்​சிக் கொடி, பேனர், அரசி​யல் அடை​யாளங்​களைப் பயன்​படுத்​த​வில்​லை. மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக மக்​கள், விவ​சா​யிகளிடம் கருத்து கேட்டு வரு​கிறோம். அதே​போன்று சட்​ட​வல்​லுநர்​களிட​மும் ஆலோ​சித்து வரு​கிறோம். எனவே, நல்லமுடிவை முதல்​வர் எடுப்​பார்.

தமிழக முதல்​வர் கர்​நாடகம் செல்​வது தொடர்​பான முடிவை முதல்​வர் அலு​வல​கமே அறிவிக்​கும். இதை பேச்​சு​வார்த்தை மற்​றும் சட்​டரீ​தி​யான நடவடிக்​கைகள் மூலம் எதிர்​கொள்​ளலாம். அதே​நேரத்​தில், மேகே​தாட்டு அணை விவ​காரம் குறித்து முன்​னாள் முதல்​வர் ஸ்டா​லினுக்​கும், முன்​னாள் துணை முதல்​வர் உதயநி​திக்​கும் முழு​மை​யான புரிதல் இல்​லை.

பல்​வேறு தடைகளை கடந்து ஜனநாயகன் திரைப்​படம் வெளி​யானது, உணர்​வுப்​பூர்​வ​மான தருண​மாக மாறிய​தால் அந்​தப் படம் பார்த்த சில அமைச்​சர்​கள் கண்​கலங்​கியது இயல்​பானதுதான்.

நீண்​ட​கால​மாக சிறை​யில் உள்ள முஸ்​லிம் கைதி​கள் விடு​தலை தொடர்​பாக மத்​திய அரசின் ஒத்​துழைப்​புடன் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்றன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>நிர்மல்குமார் | கோப்புப் படம்</p></div>
“தட்டிவிடாதீர்கள், தட்டிக் கொடுங்கள்” - தேசிய விருது விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in