நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி தவெக வேட்பாளர்

தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Updated on
1 min read

திருத்​தணி: தவெக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் தேர்​தல் பணி​களை புறக்​கணித்​த​தால், திருத்​தணி தவெக வேட்​பாளர் சத்​யகு​மார் தன்​னந்​தனி​யாக தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​ட​தால், பரபரப்பு ஏற்​பட்​டது.

திருத்​தணி சட்​டப்​பேரவை தொகுதி வேட்​பாள​ரான, தவெக தேசிய செய்தி தொடர்​பாளர் சத்​யகு​மார், சில தினங்​களுக்கு முன் திருத்​தணி நகருக்கு வந்​தார். அப்​போது ஆர்​வத்​துடன், தொகு​தி​யின் கட்சி நிர்​வாகி​கள் சத்​யகு​மாரை சந்​திக்க வந்​தனர்.

அப்​போது வேட்​பாளர் சத்​யகு​மார், நிர்​வாகி​களை மதிக்​காமல் தகாத வார்த்​தைகளால் பேசி​ய​தாக கூறப்​படு​கிறது. இதனால் சத்​யகு​மார் மீது அதிருப்​தி​யில் இருக்​கும் தொகு​தியை சேர்ந்த தவெக நிர்​வாகி​கள், சத்​யகு​மாரை மாற்றி வேறு வேட்​பாளரை கட்சி தலைமை அறிவிக்க கோரி, தேர்​தல் பணி​களை புறக்​கணித்து வரு​கின்​றனர்.

தவெக வேட்​பாளர் சத்​யகு​மார் வேட்பு மனு தாக்​கல் செய்ய எதிர்ப்பு தெரி​வித்​து, திருத்​தணி கோட்​டாட்​சி​யர் அலு​வல​கம் அருகே சென்னை - திருப்​பதி தேசிய நெடுஞ்​சாலை​யில் 50-க்​கும் மேற்​பட்ட தவெகவினர் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

நேற்று முன்​தினம் மதி​யம் 2.45 மணி​யள​வில் தவெக வேட்​பாளர் சத்​யகு​மார், மாவட்ட செய​லா​ளர் டில்​லி​பாபு மற்​றும் கட்​சி​யின் முக்​கிய நிர்​வாகி ​களை கூட அழைத்து செல்​லாமல் தனி​யாக திருத்​தணி கோட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​துக்கு சென்று வேட்​புமனு தாக்​கல் செய்​தார்.

இந்​நிலை​யில், தவெக வேட்​பாளர் சத்​யகு​மார் நேற்று திருத்​தணி நகரில், கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் யாரும் இல்​லாமல் தன்​னந்​தனி​யாக தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார்.

அப்​போது, அவர் பைபாஸ் சாலை உள்​ளிட்ட பகு​தி​களில் தனி​யாக நடந்து சென்​று, தேநீர் கடைகள், பெட்​ரோல் பங்க் மற்​றும் சாலை​யில் நடந்து சென்​றவர்​களிடம் விசில் சின்​னத்​துக்கு வாக்​களிக்​கு​மாறு பிரச்​சா​ரம் செய்​தார். இதனால், திருத்​தணி​யில் பரபரப்பு ஏற்​பட்​டது.

<div class="paragraphs"><p>தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். </p></div>
வாக்குறுதிகளுடன் வேட்பாளர்கள் போட்டி போட்டு வாக்கு வேட்டை: அம்பத்தூரில் களைகட்டும் தேர்தல் பிரச்சாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in