தவெக நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி: செங்கோட்டையனை முற்றுகையிட்ட கட்சியினர்

வெள்​ளகோ​விலில் நேற்று செங்​கோட்​டையனை முற்​றுகை​யிட்டு வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட தவெகவினர்.

வெள்​ளகோ​விலில் நேற்று செங்​கோட்​டையனை முற்​றுகை​யிட்டு வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட தவெகவினர்.

Updated on
1 min read

திருப்​பூர்: தமிழகம் முழு​வதும் தவெக நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். சில நாட்​களுக்கு முன்பு தூத்​துக்​குடி மாவட்​டச் செய​லா​ளர் பதவி கிடைக்​காத விரக்​தி​யில் நிர்​வாகி அஜிதா விஜய் காரை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டம் நடத்​தி​யதுடன், தற்​கொலைக்​கும் முயன்​றார்.

இந்​நிலை​யில், திருப்​பூர் மாவட்​டம் வெள்​ளகோ​விலில் தவெக அலு​வல​கம் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் நிர்​வாகக் குழு தலைமை ஒருங்​கிணைப்​பாளர் செங்​கோட்​டையன் அலு​வல​கத்தை திறந்​து​வைக்க வந்​த​போது, கட்​சி​யினர் சிலர் அவரை முற்​றுகை​யிட்​டுப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

வெள்​ளகோ​வில் பகு​திக்கு ஈரோடு, தாராபுரத்​தைச் சேர்ந்​தவர்​களை நிர்​வாகி​களாக நியமித்​த​தாக​வும், கட்சி மற்​றும் விஜய் மக்​கள் இயக்​கத்​தில் பல ஆண்​டு​களாகப் பணி​யாற்​றிய​வர்​களுக்​கு, பதவி வழங்​கக் கோரி​யும் இந்​தப் போராட்​டம் நடை​பெற்​றது.

செங்​கோட்​டையன் காரை செல்ல விடா​மல் தடுத்த கட்​சி​யினர், அவருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் அதிர்ச்​சி​யடைந்த செங்​கோட்​டையன் “அனை​வரும் கோபிசெட்​டி​பாளை​யத்​தில் உள்ள அலு​வல​கத்​துக்கு வாருங்​கள். அங்கு பேசி, பிரச்​சினைக்​குத் தீர்​வு​காண்​போம்” என்று கூறி​விட்​டு, அங்​கிருந்து சென்​றார். இந்​நிலை​யில், செங்​கோட்​டையனை தவெக நிர்​வாகி​கள் முற்​றுகை​யிடும் வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

<div class="paragraphs"><p>வெள்​ளகோ​விலில் நேற்று செங்​கோட்​டையனை முற்​றுகை​யிட்டு வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட தவெகவினர்.</p></div>
திருச்செந்தூர் கோயிலில் வீடியோ எடுத்த தவெகவினர்: போலீஸில் புகார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in