

தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை நாங்கள் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னம் குறித்த துண்டறிக்கையை பொதுமக்களிடம் விநியோகித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு விசில் சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எளிமையாக உள்ள இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கட்சியினர் பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை நாங்கள் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம்.
பொறுத்திருந்து பாருங்கள். விஜய் மக்களிடம் வைத்துள்ள கூட்டணியுடன் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடிப்பார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மீது தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.