கரூரில் அண்ணாமலையுடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு

கரூரில் நடை​பெற்ற திருமண விழா​வில் சந்​தித்​துக் கொண்ட பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை மற்​றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்​.

கரூரில் நடை​பெற்ற திருமண விழா​வில் சந்​தித்​துக் கொண்ட பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை மற்​றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்​.

Updated on
2 min read

கரூர் / திருச்சி / சிவகங்கை: கரூரில் நடை​பெற்ற அமமுக நிர்​வாகி இல்ல திருமண விழா​வில், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை ஆகியோர் சந்​தித்​துக் கொண்​டனர்.

கரூர் வெண்​ணெய்​மலை​யில் உள்ள தனி​யார் அரங்​கத்​தில் அமமுக மாவட்​டச் செய​லா​ளர் பிஎஸ்​என்​.தங்​கவேல் இல்​லத் திருமண விழா நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது. இதில், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் பங்​கேற்​று, மணமக்​களை வாழ்த்​தி​னார்.

இந்த திருமண விழாவுக்கு பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை​யும் வந்​தார். அப்​போது, பரஸ்​பரம் இரு​வரும் நலம் விசா​ரித்​துக் கொண்​டனர். தொடர்ந்​து, டிடி​வி.​தினகரனுக்​கு,அண்​ணா​மலை சால்வை அணி​வித்​தார். பின்​னர் இரு​வரும் சில நிமிடங்​கள் பேசிக் கொண்​டிருந்​தனர்.

பின்​னர் டிடி​வி.​தினகரன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “அம​முக மாவட்​டச் செய​லா​ளரின் உறவினர் என்ற முறை​யில் அண்​ணா​மலை வந்​துள்​ளார். தவெக​வுடன் கூட்​ட​ணியா என்​பது குறித்​தும், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமமுக​வின் நிலைப்​பாடு குறித்​தும் ஜனவரி மாதத்​துக்​குப் பிறகு தெரிய​வரும்” என்​றார்.

தவெக என்​றாலே அலர்ஜி: திருச்​சி​யில் டிடி​வி.​தினகரன் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் இந்த ஆண்டு நெல் விளைச்​சல் அதி​கம். மத்​திய அரசு விவ​சா​யிகளின் சிரமத்தை உணர்ந்து 22 சதவீத ஈரப்​ப​தத்​துடன் நெல் கொள்​முதல் செய்​வதை ஏற்​றுக்​கொள்ள வேண்​டும்.

மெட்ரோ ரயில் குறித்து திமுக, பாஜக மாறி மாறி குற்​றம்​சாட்டி வரு​கின்​றன. இபிஎஸ் ஆட்​சிக்கு வந்​தால்​தான் இந்த திட்​டம் நிறைவேற்​றப்​படும் என்று கூறு​வது கண்​டனத்​துக்​குரியது.

போதைப்​பொருள் பழக்​கத்​தால் மாணவர்​கள் பாதிக்​கப்​படு​வதுடன், கொலை, கொள்​ளை​கள் அதி​கரித்து வரு​கின்​றன. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்​டும். விஜய் மனதள​வில் பாதிக்​கப்​பட்டு உள்​ள​தாக பேர​வைத் தலை​வர் அப்​பாவு கூறி​யுள்​ளார். தவெக என்​றாலே திமுக​வினருக்கு அலர்​ஜி​தான். வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அமமுக பங்​கேற்​கும் கூட்​ட​ணி, வெற்​றிக் கூட்​ட​ணி​யாக இருக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

கூட்​டணி ஆட்​சியா? - பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

பிஹார் முதல்​வர் நிதிஷ்கு​மார் பெண்​கள் முன்​னேற்​றத்​துக்​காக முதல்​கட்​ட​மாக ரூ.10,000 கொடுத்​தார். அடுத்​தகட்ட தொகையை விடுவிக்க உள்​ளார். அதே​போல, காங்​கிரஸ் கூட்​ட​ணி​யும் ஆட்​சிக்கு வந்​தால் ரூ.2 முதல் ரூ.3 லட்​சம் வரை தரு​வ​தாகக் கூறியது. இருதரப்பு அறி​விப்​பை​யும் பார்த்​து​விட்​டு, ஜனநாயக முறைப்​படி பாஜக கூட்​ட​ணியை மக்​கள் தேர்வு செய்​துள்​ளனர்.

பிஹாரில் காங்​கிரஸ் வரலாறு காணாத தோல்​வியை அடைந்​துள்​ளது. அதே​போல, 2026 தேர்​தலில் தமிழகத்​தி​லும் காங்​கிரஸுக்கு தோல்வியே கிடைக்​கும்.

கூட்​டணி தர்​மத்​தின்​படி, பிஹாரில் நிதிஷ்கு​மாரை முதல்​வ​ராக்​கி​யுள்​ளது பாஜக. நிதிஷ்கு​மாருக்கு பாஜகவை​விட குறை​வான எம்​எல்​ஏ-க்​களே இருந்​தா​லும், கொடுத்த வாக்கை காப்​பாற்​றி​யுள்​ளது. அதே​போலத்​தான் அனைத்​துக் கூட்​ட​ணிக் கட்​சிகளை​யும் பாஜக நடத்​தும். இது​போல, கூட்​ட​ணிக் கட்​சிக்கு குறை​வான எம்​எல்​ஏ-க்​கள் இருந்​தால்,அந்​தக் கட்​சியை சேர்ந்​தவரை காங்​கிரஸ் முதல்​வ​ராக்​கு​மா?

பிரதமர் மோடி​யின் செல்​வாக்​கு, நல்ல அரசு வேண்​டும் என்ற எதிர்​பார்ப்​பு, குடும்ப ஆட்சி வேண்​டாம் என்ற மக்​களின் மனநிலை, காங்​கிரஸ் இடம்​பெறும் கூட்​ட​ணியை தோற்​கடிக்க வேண்​டும் என்ற எண்​ணம் பிஹாரைப்​போல தமிழகத்​தி​லும் நில​வு​கிறது. எனவே, வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்​கும். தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைப்​பது குறித்து தலை​வர்​கள்​தான் முடிவு செய்​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>கரூரில் நடை​பெற்ற திருமண விழா​வில் சந்​தித்​துக் கொண்ட பாஜக மாநில முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை மற்​றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்​.</p></div>
ஏஐ விஷயத்தில் இறுதி முடிவை மனிதர்களே எடுக்க வேண்டும்: ஜி 20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி உரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in