புதுச்சேரி இண்டியா கூட்டணியில் சிக்கல்: கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஒப்புதல்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்.  உடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் அஞ்சலி நிம்பல்கர் உள்ளிட்டோர். படம் எம்.சாம்ராஜ்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ். உடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் அஞ்சலி நிம்பல்கர் உள்ளிட்டோர். படம் எம்.சாம்ராஜ்

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் உள்ள காங்​கிரஸ் அலு​வல​கத்​தில், அக்​கட்​சி​யைச் சேர்ந்​தவரும் கர்​நாடக சுகா​தா​ரத்​துறை அமைச்​சரு​மான தினேஷ் குண்டு ராவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: புதுச்​சேரி​யில் ஆட்​சி​யில் இருந்த என்​ஆர்​காங்​கிரஸ் - பாஜக கடந்த தேர்​தலில் அளித்த வாக்​குறு​தி​களை பெரும்​பாலும் நிறைவேற்​ற​வில்​லை. கடந்த ஐந்​தாண்டு என்​டிஏ ஆட்​சி​யில் போலி மருந்து தயாரிப்பு மற்​றும் பல்​வேறு ஊழல்​கள் தொடர்ந்​தன.

ஆளும் என்​டிஏ அரசின் தவறான ஆட்​சிக்கு மக்​கள் பதிலடி தரு​வார்​கள். என்​டிஏ அரசு மீதான அதிருப்​தி​யால் இண்​டியா கூட்​டணி புதுச்​சேரி​யில் ஆட்​சிக்கு வரும். புதுச்​சேரி இண்​டியா கூட்​ட​ணி​யில் கொஞ்​சம் பிரச்​சினை​ இருக்​கிறது. எங்​கள் கட்​சித் தலைமை அப்​பிரச்​சினை​களுக்கு தீர்வு காண முயன்று வரு​கிறது. இப்​போது நாங்​கள் போர்க்​களத்​தில் உள்​ளோம். இண்​டியா கூட்​டணி கட்​சிகளுக்கு இடையி​லான நேரடி மோதலால் ஏற்​படும் பிரச்​சினை​களுக்கு தீர்வு காணப்​படும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்.  உடன் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் அஞ்சலி நிம்பல்கர் உள்ளிட்டோர். படம் எம்.சாம்ராஜ்</p></div>
ஐபிஎல் 2026: சிஎஸ்கே படுதோல்வி; சூர்யவன்ஷி அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in