

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,
அதிமுகவின் அண்ணா தொழிற் சங்கப் பேரவை சார்பில் மார்ச் 13-ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை பல்லவன் இல்லம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், அண்ணா தொழிற்சங்கப் பேர வைச் செயலாளர் ஆர்.கமலக் கண்ணன், தலைவர் தாடி ம.இ ராசு, பொருளாளர் எம்.அப்துல் அமீது முன்னிலையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரவையின் மாநில நிர்வாகிகள், போக்குவரத்துப் பிரிவு நிர்வாகிகள். தொழிலாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.