தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் உள்ள 60 சுங்​கச்​சாவடிகளில் கட்டண உயர்வு நள்​ளிரவு முதல் அமலுக்கு வந்​தது. அதாவது 3 முதல் 5 சதவீதம் வரை சுங்​கக்​கட்​ட​ணம் உயர்​கிறது.

தமிழகத்​தில் 6,600 கி.மீ.தொலை​வுக்கு தேசிய நெடுஞ்​சாலைகள், அண்டை மாநிலங்களு​டன் இணைக்கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் வழி​யாக தினசரி ஆயிரக்​கணக்​கான சரக்கு வாக​னங்​கள், அரசு மற்​றும் ஆம்னி பேருந்​துகள், பயணி​கள் வாக​னங்​கள் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன.

இச்​சாலைகளைப் பயன்​படுத்​தும் வாக​னங்​களில் கட்​ட​ணத்தை வசூலிக்க, தமிழகத்​தில் 77 இடங்​களில் சுங்​கச்​சாவடிகள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் 60 சுங்​கச்​சாவடிகளில் ஏப்​.1-ம் தேதி முதலும், மீத​முள்ள 17 சுங்​கச்​சாவடிகளில் செப்​.1-ம் தேதி முதலும் கட்​ட​ணங்​கள் மாற்றி அமைக்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில், தமிழகத்​தில் 60 சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் உயர்வு நள்​ளிரவு முதல் அமலுக்கு வந்​தது.

சென்​னை​யில் மாத்​தூர், சூரப்​பட்​டு, வானகரம், செங்​கல்​பட்​டில் பரனூர், கருங்​குழி, காஞ்​சிபுரத்​தில் பெரும்​புதூர், திரு​வள்​ளூரில் நல்​லூர், எஸ்​.​வி.புரம், பட்​டரைபெரும்​புதூர் உட்பட 60 சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் உயர்ந்​தது.

தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், கார்​கள் மற்​றும் ஜீப்​களுக்​கான சுங்​கக்​கட்​ட​ணம் ரூ.10 வரை உயரும். பேருந்​துகள் மற்​றும் பிற கனகர வாக​னங்​களுக்​கான கட்​ட​ணம் அவற்​றின் பிரிவு​களைப் பொருத்து ரூ.40 முதல் ரூ.200 வரை உயர​வுள்​ளது. சுங்​கச்​சாவடிக் கட்​ட​ணம் உயர்​வால், அனைத்து தரப்பு மக்​களும் பாதிக்கப்படும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. ஈரானில் நில​வும் போர் பதற்​றத்​தால், காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது.

வணிக பயன்​பாட்​டுக்​கான சிலிண்​டர் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால் ஓட்​டல் உணவு​களின் விலை ஏற்​கெனவே அதி​கரித்​துள்​ளது. தற்​போதைய சுங்​கக் கட்​ட​ணம் உயர்​வால் சரக்கு வாக​னங்​களுக்​கான செலவும் அதி​கரித்​து, அத்​தி​யா​வசி​யப் பொருட்​களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்​ள​தாக கருதப்​படு​கிறது.

நியாயமற்ற சுமை: இதுகுறித்து தமிழக காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் சுங்​கக் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட​வுள்​ளது. எரிபொருள், சுங்​கக் கட்டண உயர்​வின் விளை​வாக சரக்​குப் போக்​கு​வரத்​துக்​கான கட்​ட​ணங்​கள் உயர்ந்​து, அந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்​களின் தலை​யில் ஏற்​றப்​படு​வதை மத்​திய அரசு உணர வேண்​டும்.

சாலைகளில் தரமற்ற பணி​கள், பராமரிப்பு குறை​பாடு உள்​ளிட்ட பிரச்​சினை​களை சரிசெய்ய மத்​திய அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. மக்​கள் செலுத்​திய கட்​ட​ணத்​துக்கே உரிய வசதி கிடைக்​காமல் இருக்​கும் நிலை​யில், கட்​ட​ணத்தை மேலும் உயர்த்​து​வது நேரடி​யாக மக்​களை சுரண்​டும் செய​லாகும்.

ஆண்​டு​தோறும் சுங்​கக் கட்​ட​ணத்தை உயர்த்​திக்​கொண்​டிருப்​பது மத்​திய அரசின் மக்​கள் விரோதப் போக்​கையே காட்​டு​கிறது. சுங்​கச்​சாவடிக் கட்டண உயர்வை மறு​பரிசீலனை செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“முந்தைய சாதனைகளை முறியடிக்கும் ஆட்சியை வழங்குவோம்” - திருவாரூரில் ஸ்டாலின் உற்சாகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in