

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், படிவம் பூர்த்தி செய்து பெறுதல், பதிவு செய்தல் ஆகிய பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ம் தேதி வெளியிடப்படும்.
அன்று முதல், 2026 ஜன.15-ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் அல்லது ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம்.
அதன்பின், அவற்றின் மீது பரிசீலனைகள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ம் தேதி வெளியிடப்படுகிறது.