ஊட்டி அருகே தோடர் பழங்குடியின மக்களின் ‘மொற்பர்த்’ புத்தாண்டு பண்டிகை கோலாகலம்

தோடரின மக்களின் `மொற்பர்த்' பண்டிகையை முன்னிட்டு முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ கோயிலில் வழிபட்டு, பாரம்பரிய நடனமாடிய கிராம மக்கள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |

தோடரின மக்களின் `மொற்பர்த்' பண்டிகையை முன்னிட்டு முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ கோயிலில் வழிபட்டு, பாரம்பரிய நடனமாடிய கிராம மக்கள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |

Updated on
1 min read

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​தில் தோடர், கோத்​தர், காட்​டு​நாயக்​கர், பனியர், இருளர், குறும்​பர் இன பழங்​குடி​யின மக்​கள் வசித்து வரு​கின்​றனர். இவர்​கள் தங்​கள் உடை, உணவு முறை, வழி​பாட்டு முறை, திரு​மணம், இறப்பு என தங்​களின் அனைத்து வாழ்​வியல் நிலை​யிலும், தங்​கள் முன்​னோர் விட்​டுச் சென்ற பாரம்​பரி​யத்தை பின்​பற்​றுகின்​றனர்.

தோடரின மக்​கள் ஊட்டி மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில், தங்​களு​டைய மந்​துகளில் வசிக்​கின்​றனர். இங்கு ‘மொற்​பர்த்’ என்ற புத்​தாண்​டுப் பண்​டிகை ஆண்​டு​தோறும் டிசம்​பர் இறு​தி​யிலோ அல்​லது ஜனவரி முதல் வாரத்​திலோ கொண்​டாடப்​படு​வது வழக்​கம்.

நடப்​பாண்டு ‘மொற்​பர்த்’ பண்​டிகை, தோடரின மக்​கள் வசிக்​கும் மந்​துகளின் தலைமை மந்​தான தலைகுந்தா அரு​கே​யுள்ள முத்​த​நாடு மந்​தில் நேற்று சிறப்​பாக கொண்​டாடப்​பட்​டது.

இதில், நீல​கிரி மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​களி​லும் உள்ள பெரும்​பாலான தோடரின மக்​கள் கலந்து கொண்​டு, முத்​த​நாடு மந்​தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ மற்​றும் ‘அடை​யாள் ஓவ்’ கோயில்​களில் சிறப்பு வழி​பாடு நடத்​தினர்.

கோயில் வளாகத்​துக்​குள் செல்ல ஆண்​களுக்கு மட்​டுமே அனு​மதி உள்​ள​தால், தோடரின ஆண்​கள் தங்​கள் பாரம்​பரிய உடையணிந்து மண்​டி​யிட்டு வழி​பாடு நடத்​தினர். ஆண்​கள் வழி​பாடு நடத்தி முடிந்​ததும், பெண்​கள் கொண்​டாட்​டத்​தில் இணைந்​தனர். பின், தங்​கள் பாரம்​பரிய பாடல்​களை பாடிய படி நடன​மாடினர்.

இவர்​களை தொடர்ந்து ஆண்​கள் நடன​மாடினர். பின்​னர், இளைஞர்​கள் இளவட்​டக் கற்​களை தூக்கி தங்​கள் இளமையை நிரூபித்​தனர். பின்​னர், அனை​வருக்​கும் பிரத்யேக உணவு வழங்​கப்​பட்​டது. விழா​வில், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் என்​.எஸ்​.நிஷா சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். தோடரின மக்​கள் தலை​வர் மந்​தேஸ் குட்​டன், அடை​யாள்​குட்​டன், பீட்​ராஜ், நார்தே குட்​டன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்​.

<div class="paragraphs"><p>தோடரின மக்களின் `மொற்பர்த்' பண்டிகையை முன்னிட்டு முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த ‘மூன் போ’ கோயிலில் வழிபட்டு, பாரம்பரிய நடனமாடிய கிராம மக்கள். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |</p></div>
தவெக நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராக கரூர் ஆட்சியருக்கும் சம்மன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in