​மாநிலத்தின் வருவாயை பெருக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைப்பு

​மாநிலத்தின் வருவாயை பெருக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைப்பு
Updated on
1 min read

சென்னை: மாநிலத்​தின் வரு​வாயை பெருக்​கு​வதற்​காக பொருளா​தார நிபுணர் மாண்​டேக் சிங் அலு​வாலியா தலை​மை​யில் 6 பேர் கொண்ட வரு​வாய் மேம்​பாட்​டுக் குழுவை தமிழக அரசு அமைத்​துள்​ளது.

இதுகுறித்து நிதித்​துறை செய​லா​ளர் எம்​.ஏ.சித்​திக் வெளி​யிட்ட அரசாணை: மாநிலத்​தின் வரி மற்​றும் வரி அல்​லாத வரு​வாயை அதி​கரிக்​க​வும், வரு​வாய் கசிவு​களைத் தடுத்து நிதி ஆதா​ரங்​களை மேம்​படுத்​த​வும், மத்​திய திட்​டக்​குழு​வின் முன்​னாள் துணைத் தலை​வர் மாண்​டேக் சிங் அலு​வாலியா தலை​மை​யில்

6 பேர் கொண்ட வரு​வாய் மேம்​பாட்​டுக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இதன் உறுப்​பினர்​களாக பேராசிரியர் கே.பி.கிருஷ்ணன், வரி கொள்கை நிபுணர் அரவிந்த் மோடி, முன்​னாள் ஐஆர்​எஸ் அலு​வலர் நஜீப் ஷா, நிதித்​துறை செயலர் எம்​.ஏ.சித்​திக், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன இயக்​குநர் எம்​.சுரேஷ் பாபு ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்​தக் குழு​வானது மாநிலத்​தின் நிதித் தற்​சார்பை வலுப்​படுத்​துதல், வளர்ச்​சித் திட்​டங்​களை நிறைவேற்​று​வதற்​கான நிதி ஆதா​ரங்​களை உரு​வாக்​குதல், வரி விதி​முறை​களை முறை​யாகப் பின்​பற்​று​வதை மேம்​படுத்​துதல், வரு​வாய் கசிவு​களைத் தடுத்​தல், வரி விகிதங்​கள், கட்​ட​ணங்​கள் மற்​றும் வரி விலக்​கு​களை முறைப்​படுத்​துதல், அத்​துடன் புதிய மற்​றும் இது​வரை முழு​மை​யாகப் பயன்​படுத்​தப்​ப​டாத வரு​வாய் ஆதா​ரங்​களை கண்​டறிதல் ஆகிய​வற்​றின் மூலம் மாநிலத்​தின் வரி மற்​றும் வரி அல்​லாத வரு​வாயை நிலை​யாக அதி​கரிப்​ப​தற்​கான வழி​முறை​களை மாநில அரசுக்கு 3 மாதங்​களில் பரிந்​துரைக்​கும்.

இக்​குழு​வின் ஒருங்​கிணைப்​பாள​ராக நிதித்​துறை இணைச் செயலர் ராஜகோ​பால் சுங்​கரா செயல்​படு​வார்.

தேவைப்​பட்​டால் டாஸ்​மாக், பத்​திரப்​ப​திவு, கனிம வளம், வணிக வரி மற்​றும் போக்​கு​வரத்து போன்ற துறை​களுக்கு தனித்​தனி துணைக் குழுக்​களை அமைத்​துக் கொள்​ளலாம். மேலும், எந்​தவொரு அரசுத் துறை அல்​லது அதி​காரி​களிடம் இருந்​தும் நேரடி​யாக ஆவணங்​கள் மற்​றும் தரவு​களைக் கோரும் அதி​கார​மும் இக்​குழு​வுக்கு தரப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

​மாநிலத்தின் வருவாயை பெருக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைப்பு
கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in