

தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் |கோப்புப் படம்
திருநெல்வேலி: தமிழக அரசின் நிதி நிலைமை மிகச் சிறப்பாக உள்ளதாக நிதி அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் மரியவில்சன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரைப் பற்றி தற்போது பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
பள்ளிக் கல்வித்துறையில் மட்டும் ரூ.150 கோடிக்குமேல் ஊழல் நடைபெற்றுள்ளது. முக்கியமான கல்வித் துறையிலேயே ஊழல் செய்யக்கூடியவர்கள் திமுகவினர் என்பது, அன்பில் மகேஸ் விவகாரம் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் நிதி நிலைமை மிகச்சிறப்பாக உள்ளது. முந்தைய ஆட்சியைப்போல் அல்லாமல், திட்டங்களில் ஊழலின்றி வெளிப்படைத் தன்மையுடன் நிதி கையாளப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் கடன் வாங்குவது 21 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் மூலம் ரூ.40,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட குறைவாகும். மூலதனச் செலவினத்தை பொறுத்தவரை, தேர்தல் நடத்தை விதிகளால் 2 மாதங்கள் பணிகள் பாதிக்கப்பட்ட போதிலும், நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.12,346 கோடி செலவிடப்பட்டு ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.