

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பதின் ஒருபகுதியாக 77 மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காங்கிரஸ் அமைப்புகளை வலுப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்டமாக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சீரமைக்கப்பட்டுப் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து, சுமார் 75,000 வாக்குச்சாவடிகளை ஒருங்கிணைக்கும் வகையில், 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒருவர் வீதம் சுமார் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த சீரமைப்புப் பணிகளை மாவட்டத் தலைவர்களுடன் இணைந்து திறம்பட மேற்கொள்வதற்காக, 77 கட்சி மாவட்டங்களுக்கும் நீண்ட அனுபவம் பெற்ற முன்னாள் மாவட்டத் தலைவர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.