தமிழக முதல்வர் வந்து பெங்களூரு குடிநீர் பிரச்சினையை பார்வையிடலாம்: தேவகவுடா கருத்து

தமிழக முதல்வர் வந்து பெங்களூரு குடிநீர் பிரச்சினையை பார்வையிடலாம்: தேவகவுடா கருத்து
Updated on
1 min read

காரைக்கால்: தமிழக முதல்வர், திமுக, அதி​முக தலை​வர்​கள் என அனை​வரும் வந்து பெங்​களூரு​வில் நில​வும் குடிநீர் பிரச்​சினையை நேரில் பார்த்து தெரிந்து கொள்​ளலாம் என முன்​னாள் பிரதமர் எச்​.டி.தேவக​வுடா தெரி​வித்​துள்​ளார்.

காரைக்​கால் மாவட்​டம் திருநள்​ளாறு தர்​பாரண்​யேஸ்​வரர் கோயி​லில் நேற்று தரிசனம் செய்த அவர், பின்​னர் செய்​தியாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்​தில் திமுக​வும், அதி​முக​வும் அரசி​யல் ரீதியாக எதிரெ​தி​ராக இருந்​தா​லும், காவிரிநீர் பிரச்​சினை எழும்​போதெல்​லாம், இந்த விவ​காரத்​தில் ஒன்​று​பட்டு உறு​தி​யான நிலைப்​பாட்டை எடுக்​கின்​றன. நாங்​கள் எங்​களது மாநிலத்​தில் பாசனத்​துக்​காக தண்​ணீர் கேட்​க​வில்​லை. குடிநீருக்​காகத்​தான் கேட்​கிறோம்.

எனவே, தமிழக முதல்​வர் விஜய், திமுக, அதி​முக தலை​வர்​கள் என அனை​வரும் பெங்​களூரு, சிக்​மகளூர், கோலார் பகு​தி​களுக்கு வந்து அங்கு நில​வும் குடிநீர் பிரச்​சினையை நேரில் பார்த்து தெரிந்து கொள்​ளலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

தமிழக முதல்வர் வந்து பெங்களூரு குடிநீர் பிரச்சினையை பார்வையிடலாம்: தேவகவுடா கருத்து
“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்” - எஸ்.ஜானகிக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in