‘அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தமிழக பட்ஜெட்’

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் கருத்து
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன்

Updated on
1 min read

கடலூர்: 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அமைந்துள்ள புதிய அரசு 2026-27-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணியாற்றியிருந்தால் பணி நிரந்தரம் உள்ளிட்ட அரசுப்பணியாளர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால், அரசுப் பணியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.

இந்த அறிக்கையில் நேர்மையான, ஊழல் இல்லாத அரசு நிர்வாகமும், நேர்மையான பணி நியமனங்கள், இடமாறுதல், பதவி உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் வரவேற்கிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து அரசு உறுதிப்பாட்டுடன் இருக்க வேண்டுமென விரும்புகிறோம்.

புதிய அரசு அண்மையில் அரசுப் பணியாளர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசுப் பணியாளர்களுக்கு வெளியிட்டுள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளை போக்குவதற்கு அனைத்து சங்கங்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்ரமணியன்</p></div>
அமித் ஷா 2 நாள் பயணமாக ஆக.8-ல் புதுச்சேரி, தமிழகம் வருகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in