20 ஆயிரம் இடங்களில் சக்தி கேந்திரா பிரச்சார கூட்டம்: பாஜக தலைவர்கள் இன்று தொடக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் சக்தி கேந்திரா தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் பிப்.28-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பாஜக தலைவர்கள் பங்கேற்று இன்று தொடங்கி வைக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியை வலுப்படுத்த சக்தி கேந்திரா வழியாக பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு திட்டத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜகவின் நிர்வாகக் கட்டமைப்பில் 5 முதல் 6 வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய ஒரு பகுதியே 'சக்தி கேந்திரா' என அழைக்கப்படுகிறது. இது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களையும் வாக்காளர்களையும் இணைக்கும் மிக முக்கியமான பாலமாகும்.

இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், கட்சியின் கொள்கைகளையும், சாதனைகளையும் வீடு வீடாக விளக்கவும், தேர்தல் களத்தில் பூத் அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்தவும், ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற முழக்கத்துடன் சக்தி கேந்திரா தெருமுனை பிரச்சார கூட்டங்களை நடத்த, நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் தெருமுனை பிரச்சார கூட்டங்களை பாஜக தலைவர்கள் இன்று தொடங்கி வைக்கின்றனர்.

அதன்படி, சென்னை கிழக்கில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தொடங்கி வைக்கிறார். அதேபோல், சென்னை மேற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன், கரூரில் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னையில் வானதி சீனிவாசன், திருப்பூரில் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், சேலத்தில் கே.பி.ராமலிங்கம், வேலூரில் கார்த்தியாயினி, கன்னியாகுமரியில் விஜயதரணி, தருமபுரியில் அமர் பிரசாத் ரெட்டி உள்பட தமிழகம் முழுவதும் சக்தி கேந்திரா தெரு முனை பிரச்சார கூட்டங்களை தொடங்கி வைக்கிறார்கள். இந்த கூட்டங்கள் 28-ம் தேதி வரை 20 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட உள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in