சென்னை புத்தக காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதித்து புத்தகம்: மத்திய அரசுக்கு பாஜக புகார் கடிதம்

சென்னை புத்தக காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதித்து புத்தகம்: மத்திய அரசுக்கு பாஜக புகார் கடிதம்
Updated on
1 min read

சென்னை புத்தகக் காட்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை அவமதிக்கும் வகையிலான புத்தகத்தை விற்பனை செய்ய உள்ள பதிப்பகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய உள்துறை செயலருக்கு பாஜக கடிதம் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அனுப்பி உள்ள கடிதம்: ”சென்னை நந்தனத்தில் ஜன.8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் 'கீழைக்காற்று' பதிப்பகம் சார்பில் "திருப்பரங்குன்றம் விவ காரம் -ஜி.ஆர்.சுவாமிநாதன்:நீதி பதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?" என்ற தலைப்பிலான புத்தகம் காட்சிப்படுத் தப்பட உள்ளது.

அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், நீதிபதி ஒரு கையில் சூலத்தையும், மறு கையில் காவிக் கொடியையும் ஏந்தியிருப்பது போன்ற கேலிச் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த பதிப்பகத் துக்கு அரங்கு எண் 172 மற்றும் 173 ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நீதித் துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் இந்த புத்தகம் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப் பரங்குன்றம் கோயிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல், தீய எண்ணத்துடன் இந்த அவதூறு பரப்பப் படுகிறது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல், இந்திய நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும்.

எனவே, சம்பந்தப்பட்ட கீழைக் காற்று பதிப்பகம் மற்றும் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவதூறு பரப்பும் அந்த புத்தகத்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை உடனடியாகத் தடை செய்வதோடு, அந்த பதிப்பகத்தின் உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

சென்னை புத்தக காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை அவமதித்து புத்தகம்: மத்திய அரசுக்கு பாஜக புகார் கடிதம்
Grok ஏஐ ஆபாச புகைப்படங்கள் விவகாரம்: சர்ச்சையும் பின்னணியும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in