

திருப்பரங்குன்றத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தாழையூத்து அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்டார். | படம்: மு.லெட்சுமி அருண். |
திருநெல்வேலி/கோவை: திருப்பரங்குன்றத்துக்கு செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத் தூணில் திருக்கார்த்திகை நாளில் விளக்கேற்றலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந் திரன் திருநெல்வேலியிலிருந்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று, திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் பாளையங்கோட்டை பெருமாள்புரத்திலுள்ள நயினார் நாகேந்திரன் வீட்டைச் சுற்றி ஏராளமான போலீஸார் நிறுத்தப்பட்டனர். நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் திருப்பரங்குன்றத் துக்கு தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட நயினார் நாகேந்திரனை தாழையூத்து அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதேபோல், மேட்டுப்பாளை யம் முகாம் அலுவலகத்தில் தங்கியிருந்த முன்னாள் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேற்று காலை ஆதரவாளர் களுடன் காரில் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அன்னூர் அருகே மாவட்ட போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி, திருப்பரங்குன்றம் செல்லத் தடை விதித்தனர்.
இதனால் போலீஸாருக்கும், எல்.முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினர் கோஷங்களை எழுப்பினர். பின்னர், எல்.முருகன் முகாம் அலுவலகம் திரும்பினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை’’ என்றார்.