சென்னையில் இருந்து மதுரைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு 3 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.17-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயிலும், மானாமதுரைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்.16-ம் தேதி மாலை 4.10 மணிக்கு சிறப்பு ரயில் (06153) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்.17-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06154) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தாம்பரத்தில் இருந்து செப்.16-ம் தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்பு ரயில் (06157) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து செப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் (06158) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

சென்னை கடற்கரையில் இருந்து செப்.16-ம் தேதி காலை 10.45 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (06161) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு மானாமதுரையை சென்றடையும். மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து செப்.17-ம் தேதி பகல் 12 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (06162) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்தத் தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் எங்கெல்லாம் பலத்த காற்றுடன் மிதமான மழை வாய்ப்பு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in