கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை

படங்கள்: ஜெ.மனோகரன்

Updated on
2 min read

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி இரவு, கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 நபர்கள், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கருப்பசாமி, அவருடைய தம்பி காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை மறுநாள் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் ப்டித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முதல் கட்டமாக 50 பக்கமும், 2-வது கட்டமாக 220 பக்கமும் என மொத்தம் 270 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி சுந்தர்ராஜ் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, அவருடைய ஆண் நண்பர், உறவினர்கள், விசாரணை நடத்திய அதிகாரிகள் என 112 சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர். 72 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

சென்னையில் உள்ள தடயவியல் மற்றும் டி.என்.ஏ. பரிசோதனை அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் சாட்சியம் அளித்தனர். குற்றச் சம்பவம் நடந்து கடந்த 4 மாதங்களாக துரித விசாரணை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் குற்றச்சாட்டு குறித்து நீதிபதி சுந்தர்ராஜ் கேள்வி கேட்டார்.

<div class="paragraphs"><p>கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்... </p></div>

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்...

படங்கள்: ஜெ.மனோகரன்

அரசு தரப்பு வழக்கறிஞர் பி.ஜிஷாவும் குற்றச்சாட்டுகள் குறித்து வாதிட்டார். இதைத் தொடர்ந்து எதிர்தரப்பு வழக்கறிஞர் ஒரு மணி நேரம் ஆஜராகி வாதாடினார். அவரது வாதத்துக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் வாதம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் முடிந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் மார்ச் 7-ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று நீதிபதி சுந்தர்ராஜன் அறிவித்தார்.

அதன்படி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு குற்றச்சாட்டுக்குள்ள என மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளித்துவரப்பட்டு இன்று (மார்ச் 7) ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த மூவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்திய நீதிபதி சுந்தரராஜன், மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரிய ஈரான் அதிபர் கூறியது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in