நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற பொள்ளாச்சியைச் சேர்ந்த மூவர் விபத்தில் உயிரிழப்பு

நேபாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த முத்துக்குமார் மற்றும் மீனா.

நேபாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த முத்துக்குமார் மற்றும் மீனா.

Updated on
1 min read

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து நேபாளத்திற்கு கடந்த 7-ம் தேதி ஆன்மீக சுற்றுலா சென்ற மூன்று பேர் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மாக்கினாம்பட்டி, மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55) இவர் பொள்ளாச்சியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனா (48) இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் மீனா பொள்ளாச்சி சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு ஆகியோர் கடந்த 7-ம் தேதி நேபாளத்திற்கு 13 நாட்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.

பொள்ளாச்சியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து கங்கா காவேரி ரயில் மூலம் அலகாபாத் சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னார் திரிவேணி சங்கமம், அயோத்தி, முக்திநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற இந்து வழிபாட்டுத்தலமான மனகாமனா திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது, காந்தர் என்ற மலைப்பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த 14 பேரில் ஏழு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதில் பொள்ளாச்சி மின் நகரைச் சார்ந்த முத்துக்குமார் அவரது மனைவி மீனா மற்றும் சிடிசி காலனியைச் சேர்ந்த பாபு ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>நேபாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த முத்துக்குமார் மற்றும் மீனா.</p></div>
‘வெளியுறவுக் கொள்கையிலும் பெயிலியர் மாடல்’ - சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஆதங்கம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in