தவெக எம்எல்ஏ.விடம் ரூ.35 கோடி பேரம்: கைதான 3 பேரிடம் தீவிர விசாரணை

செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்குத் தொடர்பா?
திரு​நாவுக்​கரசு, நரேஷ், தியாக​ராஜன்

திரு​நாவுக்​கரசு, நரேஷ், தியாக​ராஜன்

Updated on
2 min read

சென்னை: தமிழக சபா​நாயகருக்கு எதி​ராக செயல்​பட, ஆளும் தவெக எம்​எல்​ஏ.​விடம் ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக 3 பேரைப் போலீ​ஸார் கைது செய்து தீவிர​மாக விசா​ரித்தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், 234 தொகு​தி​களில் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) 108 இடங்​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கிய காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட்​டு​கள், விடு​தலைச் சிறுத்​தைகள், இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் ஆகிய கட்​சிகள் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரி​வித்​தன. இதையடுத்​து, விஜய் முதல்​வ​ராகப் பதவி ஏற்​றுக் கொண்​டார்.

சட்​டப்​பேர​வை​யில் நம்​பிக்கை வாக்​கெடுப்பின் போது அதி​முக எம்​எல்​ஏக்​களின் ஒரு பிரி​வினர் தவெக​வுக்கு ஆதரவு அளித்தனர். அப்​போது, எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க கு​திரை பேரம் நடை​பெற்​ற​தாக குற்​றச்​சாட்​டு​கள் முன்​வைக்​கப்​பட்​டன. தற்​போது ஒவ்​வொரு கட்​சி​யினரும் வெவ்​வேறு கட்​சிக்​குத் தாவி வரு​கின்​றனர். அதோடு தமிழக அரசு 6 மாதங்​களில் கவிழும் என்று எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சித்து வரு​கின்​றன.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்​மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பின​ராக இருந்​தா​லும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபா​நாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ என்​.இளை​ய​ராஜா​விடம் சிலர் பேரம் பேசிய தகவல் தற்​போது அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: கிருஷ்ணகிரி மாவட்​டம், ஊத்​தங்​கரை சட்​டப்​பேர​வைத் தொகு​தி​ தவெக எம்​எல்ஏ டாக்​டர் என்​.இளை​ய​ராஜாவை, சில நாட்​களுக்கு முன்பு சென்​னையைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு என்ற நபர் செல்​போனில் தொடர்பு கொண்​டுள்​ளார். அப்​போது, தான் கருத்​துக் கணிப்பு நிறு​வனத்தை (Indian Political Democratic Strategies -IPDS) நடத்தி வரு​வ​தாக​வும், முக்​கிய அரசி​யல் கட்​சி​யைச் சேர்ந்த சிலரின் சார்​பில் பேசுவ​தாக​வும் கூறி நேரில் சந்​திக்க விருப்​பம் தெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

ஆனால், வேறு பணி​யில் இருப்​ப​தாக கூறி எம்​எல்ஏ இளை​ய​ராஜா அந்த அழைப்பை துண்​டித்​துள்​ளார். அதன் பின்​னரும் மீண்​டும் தொடர்பு கொண்​ட​தாக கூறப்​படும் திரு​நாவுக்​கரசு, தமிழக சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராக நம்​பிக்​கை​யில்லா தீர்​மானம் கொண்டு வரப்பட உள்​ள​தாக​வும், அந்த தீர்​மானத்​தின் மீதான வாக்​கெடுப்​பின் போது தாங்​கள் சொல்லும் வகை​யில் செயல்பட வேண்​டும் என்​றும் கூறிய​தாக தெரி​கிறது.

அதற்கு பிர​திபல​னாக ரூ.35 கோடி வரை வழங்க தயா​ராக இருப்​ப​தாக ஆசை வார்த்தை கூறிய​தாக​வும், அதற்கு இளை​ய​ராஜா மறுப்பு தெரி​வித்த போது, ‘‘இந்த விவ​காரம் குறித்து வெளி​யில் கூறி​னால் உங்​களுக்​கும், உங்​கள் குடும்​பத்​தினருக்​கும் பின்​விளைவு​கள் ஏற்​படும்’’ என்று மிரட்​டல் விடுத்​த​தாக​வும் கடந்த மாதம் 29-ம் தேதி எம்​எல்ஏ இளை​ய​ராஜா சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜிடம் புகார் அளித்​தார்.

அதில், ‘‘மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட சட்​டப்​பேரவை உறுப்​பின​ரான என்னை சட்​ட​ விரோத​மாகச் செல்​வாக்கு செலுத்த முயற்​சித்​ததுடன், லஞ்​சம் வழங்க முன்​வந்​தும், உயிருக்கு அச்​சுறுத்​தல் விடுத்​தும் செயல்​பட்​ட​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று கூறியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்​படை​யில், திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்​தினர். செல்​போன் அழைப்பு விவரங்​கள், தொழில்​நுட்ப ஆதா​ரங்​கள் மற்​றும் கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில், சென்னை அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த திரு​நாவுக்​கரசு, திருச்​சி​யைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேட​வாக்​கத்​தைச் சேர்ந்த தியாக​ராஜன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்​தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 பேரையும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடை​பெற்ற விசா​ரணை​யில், திமுக முன்​னாள் அமைச்​சரும், கோவை தெற்கு தொகுதி எம்​எல்​ஏவு​மான செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக் குமார், இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட நரேஷை சென்​னை​யில் சந்​தித்​தது தெரிய வந்​துள்​ளது என்று போலீஸ் தரப்​பில் கூறப்​பட்​டுள்​ளது. மேலும், செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக் குமார் ஆகியோரின் அறி​வுரை​யின்​படியே, எம்​எல்ஏ இளை​ய​ராஜாவை திரு​நாவுக்​கரசு தொடர்பு கொண்டு ரூ.35 கோடி பேரம் பேசி​ய​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் மேலும் யாருக்​கெல்​லாம் தொடர்பு உள்​ளது, கருத்​துக் கணிப்பு நிறு​வனம் என்ற பெயரில் அரசி​யல் தொடர்​பு​கள் ஏற்​படுத்​தப்​பட்​ட​தா, பின்​னணி​யில் வேறு முக்​கிய நபர்​கள் உள்​ளனரா அல்​லது ஆட்​சி​யைக் கவிக்​கும் நோக்​கின் முதல் கட்ட முயற்​சியா என்பது உட்பட பல்​வேறு கோணங்​களில் போலீ​ஸார் தீவிர​மாக வி​சா​ரித்து வரு​கின்​றனர்.

கைது செய்​யப்​பட்ட 3 பேரையும் போலீஸார் காவலில்​ எடுத்​து வி​சா​ரிக்​கும்​ போது மேலும்​ பல திடுக்​கிடும்​ தகவல்​கள்​ வெளி​யாக வாய்​ப்​புள்​ள​தாக கூறப்​படுகிறது.

கரூரில் 2 பேரிடம் விசாரணை

இந்த வழக்கில் கரூர் ஈரோடு சாலையில் கேவிபிஓஏ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்தி (45), அதன் பங்குதாரர் அதிபன் ரமேஷ் (42) ஆகியோரது வீடுகளில் சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். இருவரையும் விசாரணைக்காக போலீஸார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் திமுக பிரமுகர்கள். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>திரு​நாவுக்​கரசு, நரேஷ், தியாக​ராஜன்</p></div>
இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுத்த காங்கோ: தொடரில் இருந்து வெளியேறியது | FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in