

தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கூட விலகியது ஏன் என்று தோப்பு வெங்கடாசலம் விவரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக தலைவர் ஸ்டாலின், என் மீது நம்பிக்கை வைத்து மாவட்ட கழக பொறுப்பாளராகவும் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவித்ததற்கு நன்றி.
ஆனால் நான் மாவட்டச் செயலாளராக செயல்படுவதற்கும் சட்டப்பேரவை தேர்தலில் எனக்கும் என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
இனிமேலும் என்னால் திமுகவில் பயணிக்க முடியாத காரணத்தால் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இதுவரை என்னிடம் இல்லை. எனது ஆதரவாளர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிப்பேன்” என்று கூறினார்.