கோயில் ஆகம சான்றுகள்படி வழக்கமான இடத்தில் தீபம்: திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம்

கோயில் ஆகம சான்றுகள்படி வழக்கமான இடத்தில் தீபம்: திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம்
Updated on: 
1 min read

மதுரை: ஆவணங்​கள், ஆகமச் சான்​றுகள் மற்​றும் ஸ்தானிகர்களின் கருத்​துகளின் அடிப்​படை​யில், திருப்பரங்குன்றம் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் கார்த்​திகை மகா தீபம் வழக்​க​மாக தீபம் ஏற்​றப்​படும் இடத்​திலேயே இந்த ஆண்​டும் ஏற்​றப்​பட்​டுள்​ளது என்று கோயில் நிர்​வாகம் தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​குறித்து கோயில் நிர்​வாகம் தரப்​பில் துணை ஆணை​யர் செல்வி, அறங்​காவலர் குழுத்​தலை​வர் சண்​முகசுந்​தரம், அறங்​காவலர்​கள் ராஜபாண்​டியன், அழகப்​பன், ரெஜினாதேவி, சித்ரா ஆகியோர் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:

திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் தமிழர்​களின் தொன்​மையான வழிபாட்​டுத் தலங்​களில் ஒன்​றாக திகழ்ந்து வரு​கிறது. இக்​கோயி​லில் நடை​பெற்று வரும் திரு​விழாக்​கள், பூஜைகள், வழிபாட்​டுச் சடங்​கு​கள் மற்​றும் கார்த்​திகை தீபத்​திரு​விழா ஆகியவை பல தலைமுறைகளாக பின்​பற்​றப்​பட்டு வரும் சமய மரபு​கள். பராம்​பரியப் பழக்க வழக்கங்​கள் மற்​றும் ஆகம விதி​களின் அடிப்​படை​யில்​தான் நடை​பெறுகின்​றன.

குறிப்​பாக, கோயி​லில் காலங்​காலமாக கடைபி​டிக்​கப்​படும் வழக்​கத்​தின்​படி, மூல​வரின் சிரசுக்கு நேர் மேலே மலைமேல் உள்ள உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் அரு​கிலுள்ள தீப மண்​டபத்​தில் கார்த்திகை மகாதீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. இத்​தகைய நீண்ட காலத் தொடர்ச்​சி​யான வழிபாட்டு நடைமுறைகள் (Age Old Continued Practices), சமய மரபு​கள் மற்​றும் சடங்​கு​கள் (Custom and Rituals), ஆகம விதி​கள் (Agama rules) ஆகியவை கோயி​லின் தனித்​து​வ​மான சமய அடை​யாளங்​களாகக் கருதப்​படு​கின்​றன.

எனவே, நமது கோயி​லில் காலங்​காலமாக பின்​பற்​றப்​பட்டு வரும் மரபு​கள், பாரம்​பரிய பழக்க வழக்​கங்​கள், ஆகம விதி​முறைகள் மற்​றும் நிலைபெற்ற வழிபாட்டு நடைமுறைகள் பாது​காக்​கப்​பட வேண்​டியவை என்​றும், அவற்​றின் வரலாற்​றுத் தொடர்ச்சி மற்​றும் சமய முக்​கியத்​து​வம் கொண்ட ஆவணங்​கள், ஆகமச் சான்​றுகள் மற்​றும் ஸ்தானிகர்​களின் கருத்​துகளின் அடிப்​படை​யில், வழக்​க​மாக தீபம் ஏற்​றப்​படும் இடத்​திலேயே இந்த ஆண்​டும் தீபம் ஏற்​றவும், அதைத் தொடர்ந்து, கோயில் மரபு மற்​றும் பழக்க வழக்​கங்​களை நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்கு கொண்டு செல்​லப்​பட வேண்​டும் என்​றும் கோயில் அறங்​காவலர் குழு ஏகமனதாக தீர்​மானம் நிறைவேற்​றியுள்​ளது.

இந்த தீர்​மானத்​தின்​படியே கோயில் கோயில் மூல​வரின் சிரசுக்கு நேர் மேலே உள்ள உச்​சிப்​ பிள்​ளை​யார் கோயில் தீப மண்​டபத்தில் நேற்று மாலை 6 மணி​யளவில் திருக்​கார்த்​திகை தீபம் ஏற்​றப்​பட்​டது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ஆட்சி​யர் உத்​தரவு மதிக்​கப்​பட​வில்லை

ஆட்சி​யர் அலு​வலக அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “உச்ச நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றும் வகை​யில் தீபத்​தூணில் தீபம் ஏற்ற அனைத்து ஏற்​பாடுகளை​யும் செய்து, உரிய உத்​தரவு​களை ஆட்சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா பிறப்​பித்​திருந்​தார். ஆனால், கோயில் அறங்​காவலர் குழு தனித்​தீர்​மானம் நிறைவேற்றி ஆகம விதிப்​படிதான் தீபம் ஏற்ற முடியும். தீபத்​தூணில் தீபம் ஏற்ற இய​லாது என தெரி​வித்​து​விட்​டது. இத​னால்​தான் தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்லை. இதற்கு காரணம் கோயில் அறங்​காவலர் குழு​வும், நிர்​வாகம்​தான்’ என்​றார்.

கோயில் ஆகம சான்றுகள்படி வழக்கமான இடத்தில் தீபம்: திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் விளக்கம்
‘முருகன் தண்டிப்பார்’ - பக்தர்கள், இந்து அமைப்​பினர் வேதனை

X