திருப்பரங்குன்றம் வழக்கு: அறங்காவலர் குழு தீர்மானத்தில் முறைகேடாக பட்டர்களிடம் கையெழுத்து பெறுவதாக புகார்

அறநிலையத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்ட இந்து அமைப்பினர்; தள்ளுமுள்ளு; 6 பேர் கைது
திருப்பரங்குன்றத்தில் சுவாமிநாதன் பட்டர் வீட்டிலிருந்து வெளியே வந்த கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி. (அடுத்த படம்) திருப்பரங்குன்றத்தில் ஸ்தானீக பட்டர்களிடம் மிரட்டி கையெழுத்து பெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட இந்து அமைப்பினர். படங்கள்: நா.தங்கரத்தினம்.

திருப்பரங்குன்றத்தில் சுவாமிநாதன் பட்டர் வீட்டிலிருந்து வெளியே வந்த கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி. (அடுத்த படம்) திருப்பரங்குன்றத்தில் ஸ்தானீக பட்டர்களிடம் மிரட்டி கையெழுத்து பெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட இந்து அமைப்பினர். படங்கள்: நா.தங்கரத்தினம்.

Updated on: 
2 min read

மதுரை: மதுரை திருப்​பரங்​குன்​றம் முருகன் கோயில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படி உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் முன்பு கார்த்​திகை தீபம் ஏற்​றிய​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் மதுரை மாவட்ட ஆட்சி​யர் தரப்​பில் தெரி​வித்​திருந்த நிலை​யில், அந்த தீர்​மானத்​தில் கோயில் ஸ்தானீக பட்​டர்​களை மிரட்டி, முறைகேடாக தீர்​மானத்​தில் கையெழுத்து பெறு​வ​தாக பட்​டர் வீட்டு முன்பு சென்று கிராமத்​தினர் வாக்​கு​வாதம் செய்​தனர். இதில் 6 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

திருப்​பரங்​குன்​றம் முருகன் கோயி​லில் நேற்று முன்​தினம் நடந்த திருக்​கார்த்​திகை தீபத் திரு​விழா​வில், உச்ச நீதி​மன்ற உத்​தரவுப்​படி தமிழக அரசு மலை உச்​சி​யிலுள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றாமல், அறங்​காவலர் குழு தீர்​மானத்​தின்​படி வழக்​கம்​போல் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் முன்பு தீபம் ஏற்​றப்​பட்​ட​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் மாவட்ட ஆட்சி​யர் தரப்​பில் தகவல் தெரி​விக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் அறங்​காவலர் குழு தீர்​மானத்​தில் கோயில் ஸ்தானீக பட்​டர்​களிடம் இது​வரை கையெழுத்து பெறவில்லை எனவும் கூறப்​பட்​டது.

இந்​நிலை​யில் நேற்று கோயிலுக்கு முன்​புள்ள கோயில் முதல் ஸ்தானீக பட்​டர் சுவாமிநாதன் வீட்​டில் கோயில் துணை ஆணை​யர் ஜி.செல்வி, அறங்​காவலர் குழுத் தலை​வர் சண்​முகசுந்​தரம் மற்​றும் அறங்​காவலர்​கள், கோயில் கண்​காணிப்​பாளர் ரஞ்​சனி, இளநிலை உதவியாரளர் மணிமாறன் ஆகியோர் அடங்​கிய குழு​வினர் ஸ்தானீக பட்​டர்​களிடம் கையெழுத்து பெற வந்​துள்​ள​தாக தகவல் பர​வியது.

தகவலறிந்து நேற்று மாலை​யில் அவரது வீடு முன்பு கூடிய கிராம பொது​மக்​கள், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு இருக்​கும்​போது முறைகேடாக ஏற்​கெனவே தீர்​மானம் நிறைவேற்​றிய ஆவணங்​களில் கையெழுத்து வாங்​கு​வது தவறு எனக் கூறி வாக்​கு​வாதம் செய்​தனர்.

இத்​தகவலறிந்த காவல் துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன் தலை​மையி​லான போலீ​ஸார் பட்டர் வீட்டு முன்பு வாக்​கு​வாதம் செய்த ராமலிங்​கம், சரவணகுமார், வெற்​றிவேல், முருகன் ராஜேஸ்வரன், அருண் உள்​ளிட்ட 6 பேரை கைது செய்​தனர். பின்பு சுமார் 7 மணி​யளவில் சுவாமிநாத பட்​டர் வீட்​டி​லிருந்து கோயில் துணை ஆணை​யர் ஜி.செல்வி, கண்​காணிப்​பாளர் ரஞ்​சனி, இளநிலை உதவியாளர் மணிமாறன் ஆகியோர் வெளியேறி கோயில் வாக​னத்​தில் புறப்​பட்​டுச் சென்​றனர்.

எங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை: ஸ்தானீக பட்டர்கள் வேதனை கடிதம்

திருப்பரங்குன்றம் கோயில் ஸ்தானீக பட்டர்கள் சுவாமிநாத பட்டர், பாலசுப்பிரமணி பட்டர், சொக்கு சுப்பிரமணிய பட்டர், சண்முக சுந்தரம் பட்டர் ஆகியோர் நவ.24-ம் தேதி அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமண்ய சுவாமி கோயில் நிர்வாக அதிகாரி / துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் அறங்காவலர்களுக்கு இத்திருக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக் கொண்டது.

இப்பவும் இன்று நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.

இத்திருக்கோவிலில் நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் அளித்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு அளித்த கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். என்று ஸ்தானீக பட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றத்தில் சுவாமிநாதன் பட்டர் வீட்டிலிருந்து வெளியே வந்த கோயில் துணை ஆணையர் ஜி.செல்வி. (அடுத்த படம்) திருப்பரங்குன்றத்தில் ஸ்தானீக பட்டர்களிடம் மிரட்டி கையெழுத்து பெறுவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட இந்து அமைப்பினர். படங்கள்: நா.தங்கரத்தினம்.</p></div>
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர் அர்லேகர்

X