“பதவி, அதிகாரத்துக்காக விசிக மாறி மாறி முடிவெடுக்காது” - திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவன்

Updated on: 
1 min read

தஞ்சை: “நாங்கள் வெறும் பதவிக்காக, அதிகாரத்துக்காக மாறி மாறி முடிவெடுத்தவர்கள் இல்லை. சாதிய, மதவாத சக்திகளை ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “தென்னிந்திய மாநிலங்களில் விசிகவின் வேர்கள் மக்களிடையே பரவி வருகிறது. இந்த இயக்கம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் உறுதியுடன் இயங்கி வருகிறது. தமிழகத்தில் விசிகவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் காலம் கணியும். நான் ஜோதிடம் கூறவில்லை. கடந்த காலங்களில் நான் சொன்னதெல்லாம் ஒவ்வொன்றாக நடந்து கொண்டே வருகின்றன.

நாங்கள் வெறும் பதவிக்காக, அதிகாரத்துக்காக மாறி மாறி முடிவெடுத்தவர்கள் இல்லை. சாதிய, மதவாத சக்திகளை ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், எங்கள் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள், சமூக ஊடகங்களில் எங்களுக்கு எதிரான அவதூறுகளை பரப்பலாம். அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை.

டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து அவரே எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகளுக்கெல்லாம் கருத்து கூற முடியாது.

தவெகவினர் அரசியலுக்கு புதியவர்களாக இருந்தாலும், தங்களது சக்திக்கு ஏற்ப போராடி மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளனர். தவெக அரசின் நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>திருமாவளவன் </p></div>
“விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் ‘லியோ தாஸ்’ ஆக வலம் வருகின்றனரோ?” - பழனிசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in