கடலோர பகுதிகளில் 23, 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு

கடலோர பகுதிகளில் 23, 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக கடலோர மாவட்​டங்​களில் 23, 24 தேதி​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தென்​கிழக்கு அரபிக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இன்​றும், நாளை​யும் வறண்ட வானிலை நில​வக்​கூடும். அதி​காலை வேளை​யில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்​டம் காணப்​படும். 23-ம் தேதி கடலோர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், 24-ம் தேதி ஒருசில இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

உள் தமிழகத்​தில் வறண்ட வானிலை நில​வக்​கூடும். 25, 26 தேதி​களில் தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் லேசான மழை பெய்யும்.

கடலோர பகுதிகளில் 23, 24-ம் தேதி மழைக்கு வாய்ப்பு
திமுக அழைத்ததும் கூட்டணி பேச்சு தொடங்கும்: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in