“கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவுமில்லை” - எர்ணாவூர் நாராயணன்

எர்ணாவூர் நாராயணன் | கோப்புப் படம்

எர்ணாவூர் நாராயணன் | கோப்புப் படம்

Updated on
1 min read

கும்பகோணம்: “தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை” என சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.

கும்பகோணத்தில் டெல்டா மண்டல சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பிப்.8ம் தேதி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சமத்துவ மக்கள் கழக நிறுவனத்தலைவரும், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவருமான எர்ணாவூர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமத்துவ மக்கள் கழகம் தொடர்ந்து கடந்த 3 தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தோம். 2026-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கின்றோம்.

இந்த தேர்தல் 3 முனைப் போட்டியாக நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏழை பெண்களுக்கு தேவையான உதவிகளை தமிழக முதல்வர் செய்து வருகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் பிப்.15-ம் தேதி சென்னையில் மாநில கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசும் போது, எங்களிடம் பேசுவதாக கூறியுள்ளனர். நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் கேட்பதற்கும் தயாராக இருக்கின்றோம், அவர் கொடுப்பதற்கும் தயாராக உள்ளார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சியில் தான் கட்டமைப்பு உள்ளது. விஜய், அதிமுக யார் வந்தாலும், 2026 தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனாலும் எதிபாராத விதமான பிரச்சனைகள் தான் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>எர்ணாவூர் நாராயணன் | கோப்புப் படம்</p></div>
தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க இபிஎஸ் வேண்டுகோள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in