சென்னை | ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன திருட்டு: திரிபுராவைச் சேர்ந்த 2 பேர் கைது

சென்னை | ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன திருட்டு: திரிபுராவைச் சேர்ந்த 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: ஏடிஎம் இயந்​திரத்​தில் பணம் வரும் பாதை​யில் ஸ்டிக்​கர் ஒட்டி நூதன முறை​யில் பணத் திருட்​டில் ஈடு​பட்ட திரிபு​ராவைச் சேர்ந்த இரு​வரை, போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

புழல் பகு​தி​யில் உள்ள இந்​தி​யன் வங்​கி, விநாயகபுரம் கிளை மேலா​ளர் விஜயலஷ்மி, புழல் காவல் நிலை​யத்​தில் புகார் ஒன்று அளித்​தார். அதில், கடந்த ஜூன் 23-ம் தேதி இரவு கல்​பாளை​யத்​தில் உள்ள இந்​தி​யன் வங்கி ஏடிஎம் மையத்​தில் வாடிக்​கை​யாளர் ஒரு​வர் ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்​ற​போது, கணக்​கில் இருந்து பணம் பிடித்​தம் செய்​யப்​பட்​டது.

ஆனால், ஏடிஎம் இயந்​திரத்​தில் இருந்து பணம் வரவில்லை என தெரி​வித்​திருந்​தார். இதையடுத்​து, தொழில்​நுட்ப நிபுணர்​கள் மூலம் சம்​பந்​தப்​பட்ட ஏடிஎம் இயந்​திரம் பரிசோ​திக்​கப்​பட்​டது. அப்​போது, பணம் வெளியே வரும் பகு​தி​யில் மர்ம நபர்​கள் ஸ்டிக்​கர் ஒட்டி மறைத்து வைத்​திருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

இதனால், பணம் வரவில்லை என்று நினைத்து வாடிக்​கை​யாளர்​கள் அங்​கிருந்து சென்ற பிறகு, அந்த ஸ்டிக்​கரை அகற்றி உள்ளே சிக்​கி​யிருந்த பணத்தை அவர்​கள் திருடிச் சென்​றது தெரிய​வந்​தது.

இதே​போல், ரூ.20 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.6,500 மற்​றும் ரூ.2 ஆயிரம் என 4 வாடிக்​கை​யாளர்​களிடம் இருந்து மொத்​தம் ரூ.30,500 திருடப்​பட்​டிருப்​பதும் விசா​ரணை​யில் உறு​தி​யானது.

இதுதொடர்​பாக, புழல் காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​து, சம்பவ இடத்​தில் இருந்த கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர்.

அதன் அடிப்​படை​யில், திரிபுரா மாநிலத்​தைச் சேர்ந்த ராஜிப் ஆலம் (30), நியாஸ் உதின் (22) ஆகிய 2 பேரை நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். அவர்​களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மீட்​கப்​பட்​டது.

விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்ட இரு​வர் மீதும் சோழ​வரம் காவல் நிலை​யத்​தில், இதே​போன்று நூதன ஏடிஎம் பணம்​ திருட்​டு வழக்​கு இருப்பது தெரிய வந்தது.

சென்னை | ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன திருட்டு: திரிபுராவைச் சேர்ந்த 2 பேர் கைது
சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தடையின்றி குடிநீர் கிடைப்பதை ஆய்வு செய்ய குழு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in