கரும்பு கட்டுப்பாடு சட்டம் - 2026 ரத்து; விவசாயிகளின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: கரும்பு விவசாயிகள் சங்கம் பெருமிதம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘கரும்பு கட்டுப்பாடு சட்டம் 2026-ஐ மத்திய அரசு ரத்து செய்திருப்பது, விவசாயிகளின் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966-க்கு மாற்றாக, கரும்பு கட்டுப்பாடு சட்டம் - 2026-ஐ மத்திய பாஜக அரசு முன்மொழிந்தது.

இந்த சட்டத்தின் மூலம் 12.25 சதவீத பிழிதிறனுக்கு கரும்பு விலை நிர்ணயிக்கப்படும், சர்க்கரை விற்பனை விலையோடு கரும்புக்கான விலை இணைக்கப்படும், சர்க்கரை ஆலைகள் நட்டம் என்று கருதினால் மாநில அரசின் ஒப்புதலோடு கரும்பு விலையை குறைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பன உள்பட கரும்பு விவசாயிகளுக்கு விரோதமாகவும் சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாகவும் ஷரத்துகள் இடம் பெற்றிருந்தன.

நாடு முழுவதும் உள்ள 5 கோடி கரும்பு விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு முன்மொழிந்த இச்சட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும் என்று அகில இந்தியகரும்பு விவசாயிகள் சம்மேளனம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தின. நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக மத்திய பாஜக அரசு முன்மொழிந்த கரும்பு கட்டுப்பாடு சட்டம் - 2026-ஐ ரத்து செய்து நேற்று முன்தினம் உத்தரவிடப்பட் டுள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

இனியாவது, கரும்பு விவசாய பிரதிநிதிகளிடம் முழுமையான விவாதத்தை நடத்தி கருத்துகளைக் கேட்டறிந்து கரும்பு கட்டுப்பாடு சட்டம் - 1966-ல் தேவையான திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in