தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு: 15 மனுக்களும் ஏற்பு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு: 15 மனுக்களும் ஏற்பு
Updated on
1 min read

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் மனுவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இறுதியில் வேட்புமனு பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ்-தவெக-விடுதலை சிறுத்தைகள் கூட்டணி சார்பில் விநாயகம், திமுக சார்பில் சேது செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மொத்தமாக 14 பேர் 15 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செப்.17) தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் மனுவுக்கு காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். அசோக் ஆனந்தின் பிரமாண பத்திரத்தில் அவரது கல்வி அறக்கட்டளை வருவாய் சில ஆண்டுகளுக்கு பூஜ்ஜியம் என குறிப்பிட்டதைக் கூறி எதிர்த்தனர்.

காலியாக, ஏதுவும் குறிப்பிடாமல் இருந்தால்தான் தவறு; அதில் எண்கள் குறிப்பிட்டுள்ளதால் காங்கிரஸாரின் எதிர்ப்பை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. அசோக் ஆனந்தின் மனுவை ஏற்றார். இந்த வேட்புமனு பரிசீலனையில் தாக்கல் செய்யப்பட்ட 15 மனுக்களும் ஏற்கப்பட்டன.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு: 15 மனுக்களும் ஏற்பு
மதுராந்தகம் தொகுதியில் 8 வாக்குசாவடிகள் பதற்றமானவை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in